பொள்ளாச்சியில் தூய்மைப்பணியாளர்கள் வாழ்வுரிமை பேரணி - 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி அனைத்து வகையான தூய்மை பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தூய்மை பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொள்ளாச்சியில் நடைபெற்ற மே தினப் பேரணியில் தமிழகத்தில் கலைஞர் அறிவித்த 6 மணி நேர வேலைத் திட்டத்தை உறுதிப்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.



பொள்ளாச்சி: உழைப்பாளர் தினத்தையொட்டி, பொள்ளாச்சியில் தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதார தூய்மை மற்றும் பொது பணியாளர்கள் சங்கம் சார்பில் தூய்மை பணியாளர்களின் வாழ்வுரிமை பேரணி நடைபெற்றது.

மாவட்ட தலைவர் முருகானந்தம் மாவட்டச் செயலாளர் வேல்முருகன் தலைமையில் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடங்கி பேரணி, மத்திய பேருந்து நிலையம், வெங்கட்ராமன் வீதி வழியாக சென்று நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில் 200.க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.



இந்தப் பேரணியின்போது, திமுக அரசு கடந்த தேர்தல் அறிக்கையில் அறிவித்த அனைத்து வகையான தூய்மை பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். உள்ளாட்சி துறையில் உள்ள ஒரு லட்சம் பணியாளர்கள் வேலை இழக்கும் வகையில் 152, 139,111 அரசாணை வெளியிடப்பட்டது.



உடனடியாக தமிழக அரசு அந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். சட்டமன்றத்தில் 12 மணி நேர வேலை திட்டத்தை முன்மொழிந்துள்ளனர். உடனடியாக அந்தத் திட்டத்தை வாபஸ் பெற்று கலைஞர் அறிவித்த 6 மணிநேர வேலை திட்டத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

Newsletter

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...