கஞ்சா வியாபாரிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு - கோவை நீதிமன்றம் அதிரடி!

கோவை வெரைட்டிஹால் அருகே கடந்த 2019ஆம் ஆண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சதீஷ்குமார் என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 1.2 கிலோ அளவிலான கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்த வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், சதீஷ்குமாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது.



கோவை: கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

கோவை வெரைட்டிஹால் ரோடு போலீசார் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் தேதி இளைஞர் ஒருவர் சி.எம்.சி காலனிக்கு செல்லும் சாலையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. 

அதன்பேரில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் கோவை பழைய மேம்பாலத்தில் இருந்து சி.எம்.சி. காலனிக்கு செல்லும் வழியில் ஒருவர் கஞ்சா விற்பனை செய்துகொண்டு இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

அதில் அவர் வெரைட்டிஹால் ரோடு சிரியன் சர்ச் வீதியை சேர்ந்த சதீஷ்குமார் என்பதும், கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும் அவர் வைத்திருந்த மஞ்சள் நிற துணிப்பையில் இருந்த ஒரு கிலோ 200 கிராம் அளவிலான கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்த நிலையில், இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை இன்றியமையா பொருட்கள் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் சாட்சி விசாரணைகள் நிறைவடைந்தது. இதையடுத்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. 

வழக்கை விசாரித்த நீதிபதி லோகேஸ்வரன், குற்றம் சாட்டப்பட்ட சதீஷ்குமாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் ஓராண்டு கடுங்காவல் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...