புலம்பெயர்ந்தோருக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ் கொரோனா தொற்று காரணமாக வெளிநாட்டில் வேலையிழந்து தமிழகம் திரும்பிய தமிழர்கள் தொழில் தொடங்கிட ஊக்குவிப்பதற்கான தமிழ்நாடு அரசின் சார்பில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: வெளிநாட்டில் வேலையிழந்து தமிழகம் திரும்பிய தமிழர்கள் தொழில் தொடங்கிட ஊக்குவிப்பதற்கான தமிழ்நாடு அரசின் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு அரசு கொரோனா தொற்று காரணமாக வெளிநாட்டில் வேலையிழந்து தமிழகம் திரும்பிய புலம்பெயர்ந்தோர் 25 சதவீத மானியத்துடன் தொழில் தொடங்க ஏதுவாக புலம் பெயர்ந்தோர்க்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் MIGRANTS EMPLOYMENT GENERATION PROGRAMME (MEGP)] என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் குறைந்தது 2 ஆண்டுகள் பணிபுரிந்து கொரோனா தொற்று பரவலால் வேலையிழந்து தமிழகம் திரும்பிய தமிழர்கள் சுயதொழில் தொடங்க மானியத்துடன் இணைந்த கடனுதவி பெற்று பயன்பெறலாம்.
கொரோனா பரவல் காரணமாக 2020 ஜனவரி 1 அன்று அல்லது அதற்கு பிந்தைய நாட்களில் தமிழ்நாடு திரும்பியவர்கள் வியாபாரம் மற்றும் சேவை சார்ந்த தொழில்களை அதிகபட்சம் ரூ.5 லட்சம் திட்ட மதிப்பீட்டிலும், உற்பத்தி சார்ந்த தொழில்களை அதிகபட்சம் ரூ 15 லட்சம் திட்ட மதிப்பீட்டினும் துவங்கலாம்.
இத்திட்டத்தில் பயன்பெற குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். வயது வரம்பு பொது பிரிவினருக்கு 18 முதல் 45 வரையிலும், இதர பிரிவினருக்கு 18 முதல் 55 வரையிலும் இருக்க வேண்டும்.
சொந்த முதலீடாக பொதுப் பிரிவினர் திட்டத் தொகையில் 10 சதவீதமும், சிறப்பு பிரிவினர் 5 சதவீதமும் செலுத்த வேண்டும். இத்திட்டத்தின் கீழ் துவங்கப்படும் தொழில்களுக்கு திட்ட மதிப்பீட்டில் 25% அதிகபட்சம் 2.50 லட்சம் மானியம் வழங்கப்படும்.இந்த மானியத் தொகை 3 ஆண்டுகளுக்கு வங்கியில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டு பின், கடனுக்கு சரி கட்டப்படும்.
இந்த திட்டமானது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையின் மூலம் மாவட்ட தொழில் மையம் வாயிலாக செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற திட்ட அறிக்கை மற்றும் ஆவணங்களுடன் www.msmeonline.tngov.in என்ற தளத்தில் இணையவழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம், கோயம்புத்தூர் - 641001 என்ற முகவரியை நேரடியாகவோ அல்லது 0422-2391878, 239731 என்ற எண்ணிலோ அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.