வால்பாறை அரசு மருத்துவமனையில் நுழைந்த 5 அடி பாம்பு - பத்திரமாக பிடித்துச் சென்ற தீயணைப்பு துறை!

வால்பாறை அரசு மருத்துவமனையில் புகுந்த ஐந்து அடி நீளம் கொண்ட சாரைப்பாம்பை கண்டு நோயாளிகள் அதிர்ச்சி அடைந்த நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் லாவகமாக பிடித்துச் சென்றனர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அரசு மருத்துவமனையில் புகுந்த 5 அடி நீள பாம்பை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக பிடித்து சென்றனர்.

வால்பாறையில் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு வார்டில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் இன்று மதியம் பாம்பு ஒன்று வார்டு பகுதிக்கு வந்ததாக நோயாளிகள் அச்சத்தில் தீயணைப்பு துறைக்கு அழைத்தனர்.



அதைத் தொடர்ந்து தீயணைப்பு துறையினர் மருத்துவமனை வந்து பாம்பை தேடினர் நீண்ட நேரம் தேடிய போது பாம்பு மருந்துகள் வைக்கும் அறை அருகே இருந்த பாம்பை லாவகமாக பிடித்தனர்.

பிடிபட்ட பாம்பானது 5 அடி நீளம் கொண்ட சாரைப்பாம்பு என கூறிய தீயணைப்பு துறையினர், மழைக்காலம் என்பதால் பாம்பு அறைக்கு வந்து இருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...