திருப்பூரில் அரசு இடத்தை திமுகவினர் ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆட்சியரிடம் புகார்!

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 3840 சதுர அடி பரப்பளவு உள்ள அரசு இடத்தை திமுகவினர் ஆக்கிரமிக்க முயற்சித்து வருவதாக முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.



திருப்பூர்: திருப்பூரில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை திமுகவினர் ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.



திருப்பூர் தெற்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுகவை சேர்ந்த குணசேகரன் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் அன்பகம் திருப்பதி, கண்ணப்பன் கட்சி நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாநகராட்சி மூன்றாவது மண்டலத்திற்குட்பட்ட நொய்யல் வீதி பகுதியில் 3840 சதுர அடி பரப்பளவு கொண்ட அரசுக்கு சொந்தமான இடம் உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியின்போது திருப்பூர் பெரிய கடைவீதியில் செயல்பட்டு வரும் பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இட பற்றாக்குறை காரணமாக அந்த இடத்தை பள்ளி பயன்பாட்டிற்காக பயன்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது.

தற்போது திமுக ஆட்சி அமைந்த உடன் 3840 சதுர அடி அளவுள்ள அந்த இடத்தை திமுகவினர் 24 பேரின் பெயரில் பட்டா வழங்குவதற்கு திமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் பரிந்துரை செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கக்கூடிய வகையில் உள்ளது.

பள்ளி பயன்பாட்டிற்காக கடந்த அதிமுக ஆட்சியில் ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், இந்த இடத்தை அபகரிப்பதற்காக நீதிமன்றத்தில் அரசு தரப்பில் இந்த இடத்தை அபகரிப்பதற்காக அரசு அதிகாரிகளையோ வருவாய் துறை அதிகாரிகளையோ தரப்பினர்களாக சேர்க்காமல் தனிப்பட்ட நபர்கள் தங்களுக்கு இடையே பாகப்பிரிவினை வழக்காக தொடர்ந்து மோசடி செய்துள்ளனர்.

இந்த வழக்கு விசாரணை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்து தீர்வு காண கூறி தள்ளுபடி செய்யப்பட்ட நிலையிலும் அதனை மறைத்து தற்போது 24 நபர்களுக்கு பட்டா வழங்க சட்டமன்ற உறுப்பினர் பரிந்துரை செய்திருப்பதன் மூலம் அந்த இடத்தை திமுக அபகரிக்க முயற்சி மேற்கொண்டு வருவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

இல்லை எனில் அதிமுக சார்பில் அப்பகுதி மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...