கோவையின் வளர்ச்சிக்காக பாடுபட்ட தலைவர்களுடைய புகைப்படங்கள் பெயர் பலகையுடன் திறப்பு!

ஆர்.எஸ்.புரம் அடுத்த டி.பி.ரோட்டில் ‘லெஜண்ட்ஸ் ஆப் கோயம்புத்தூர்’ என்ற பெயரில் கோவையின் வளர்ச்சிக்கு பாடுபட்ட 30 தலைவர்களின் புகைப்படங்களுடன் கூடிய தகவல்கள் காட்சிபடுத்தப்பட்டு உள்ளன. மேலும் 30 தலைவர்களின் படங்களை காட்சிபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையர் தகவல்.



கோவை: ஆர்.எஸ்.புரம் அடுத்த டி.பி.ரோட்டில் கோவையின் வளர்ச்சிக்கு பாடுபட்ட தலைவர்களின் புகைப்படங்களுடன் கூடிய தகவல்கள் காட்சிபடுத்தப்பட்டு உள்ளன.

சென்னைக்கு அடுத்தபடியாக தொழில், கல்வி, மருத்துவம் என அனைத்து துறைகளிலும் வளர்ந்த நகரமாக கோவை திகழ்கிறது. இதற்கு பல்வேறு தரப்பினரின் உழைப்பும், பங்களிப்பும் முக்கிய காரணம்.

இதற்கு காரணமான மூத்த முன்னோடிகளை இன்றைய தலைமுறையினர் அறியும் விதமாக ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோட்டில் லெஜண்ட்ஸ் ஆப் கோயம்புத்தூர் என்ற பெயரில் புகைப்படங்களுடன் கூடிய தகவல்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.



இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் பிரதாப் கூறியதாவது, கோவை மாநகரம் பலரின் உழைப்பு, பங்களிப்பின் மூலமாக வளர்ந்த ஒரு நகரமாகும். ஒரு சிறிய நகரமாக இருந்து, இன்று தமிழகத்தின் 2-வது பெரிய மாநகராட்சியாக உயர்ந்துள்ளது.

கோவை மாநகராட்சி நிர்வாகம், பொலிவுறு திட்டத்தின் (ஸ்மார்ட் சிட்டி) கீழ் பல்வேறு திட்டபணிகளை மேற்கொண்டு வருகிறது. மாநகராட்சி பகுதிகளில் மாதிரி சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.



அதன் ஒரு பகுதியாக ஆர்.எஸ்.புரம் டி.பி.சாலையின் இருபுறங்களிலும் தகவல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. கோவை மாநகர் உருவாவதற்கு காரணமான பல தலைவர்கள் தங்களது அறிவு, நேரம், பொருட்கள் போன்றவற்றை செலவழித்துள்ளனர்.



அவர்களை நினைவு கூறும் வகையிலும், பெருமைபடுத்தும் வகையிலும், மக்கள் அவர்களை தெரிந்து கொள்ளும் வகையிலும் கோவை நகரை சேர்ந்த தொழிலதிபர்கள், பண்டைய கால நகர தலைவர்கள் உள்ளிட்டோரின் புகைப்படங்கள், அவர்கள் குறித்த தகவல்களை காட்சிக்கு வைக்கும் பணி தொடங்கி உள்ளது.



தற்போது 32 பலகைகளில் இந்த காட்சிகள் வைக்கப்பட்டு உள்ளன. இன்னும் 30 பலகைளில் கோவை நகரை வளர்த்தவர்களின் புகைப்படங்கள், அவர்களது தகவல்களை வைக்க திட்டமிட்டுள்ளோம். மொத்தமாக 62 பலகைகளில் இந்த தகவல்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

இதில் விடுபட்டுள்ளவர்கள் குறித்த விவரங்களை மாநகராட்சி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும் பழங்காலத்தில் கோவையில் இருந்த இயற்கை சார்ந்த இடம், பழமை வாய்ந்த கட்டிடங்கள் குறித்த தகவல்களை தகவல் பலகைகளில் வைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வருகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த தகவல் பலகைகளை அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் நின்று பார்த்து படித்து சென்று வருகின்றனர்.

Newsletter

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...