28வது நாளாக தொடரும் நல்லதங்காள் விவசாயிகள் போராட்டம்!

நல்லதங்காள் நீர்த்தேக்க அணைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் வருவாய்துறை மேல்முறையீட்டை திரும்ப பெற கோரி விவசாயிகள் ரோடு ரோலர் முன்பு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: நல்லதங்காள் நீர்த்தேக்க அணைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் விவசாயிகள் ரோடு ரோலர் முன்பு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த பொன்னிவாடி கிராமத்தில் நல்லதங்காள் நீர்த்தேக்க அணை உள்ளது. இந்த அணைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் உரிய இழப்பீடு வழங்க கோரி கோனேரிப்பட்டியில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் 28 வது நாளாக காத்திருப்பு பந்தலில் விவசாயிகள் ரோடு ரோலர் முன்பாக தற்கொலை செய்து கொள்ள போவதாக தமிழக அரசு மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் குறித்து விவசாயி பாலசுப்பிரமணியன் கூறியதாவது, நல்லதங்காள் அணை கட்டுமான பணிக்காக 150 விவசாயிகளிடமிருந்து 750 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.

நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர்களுக்கு நீதிமன்றம் தீர்ப்பு வந்தும் இழப்பீடு வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் வருவாய் துறை அதிகாரிகள் வழக்கை மேல்முறையீடு செய்தனர். எனவே மேல்முறையீட்டை திரும்ப பெற வலியுறுத்தி, ரோடு ரோலர் முன்பாக எங்களை நசுக்கி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக போராட்டம் நடத்துகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...

Heavy Rain, Strong Winds Lash Thudiyalur and Surrounding Areas

Heavy rain accompanied by strong winds lashed Thudiyalur and several parts of Coimbatore’s northern outskirts for more t...

துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை

கோவை துடியலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...

கோவை போத்தனூரில் கட்டுமான தளத்தில் பணியாற்றிய இளைஞர் திடீர் மரணம்

கோவை போத்தனூர் கிரீன் பார்க் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வெள்ளலூரை சேர்ந்த 29 வயது இளைஞர் சந்தோஷ் திடீரென ம...