கோவையில் பிற மதவழிபாட்டு தலம் அருகே விநாயகர் சிலை வைக்க அனுமதியில்லை - ஆட்சியர் அறிவிப்பு!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான முன்னேற்பாட்டு ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் பேசிய ஆட்சியர் கிராந்திகுமார், மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற மத வழிபாட்டு தலங்களுக்கு அருகில் சிலைகள் அமைப்பதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தினார்.


கோவை: கோவை மாவட்டத்தில் பிறமத வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே விநாயகர் சிலைகளை வைக்க கூடாது என மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் அறிவித்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான முன்னேற்பாட்டு ஆலோசனை கூட்டம் ஆட்சியர் கிராந்திகுமார் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் சந்தீஸ், சண்முகம், ராஜரா ஜன், மாவட்ட வருவாய் அதிகாரி ஷர்மிளா, கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் (பொது) கோகிலா, மாநகராட்சி துணை கமிஷனர் சிவக்குமார், வருவாய் கோட்டாட்சியர்கள் பண்டரிநாதன், கோவிந்தன் மற்றும் இந்து-முஸ்லிம் அமைப்பினர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் நிகழ்ச்சியில் பேசும்போது கூறியதாவது,

பொது மற்றும் தனியார் இடங்களில் விநாயகர் சிலை வைக்கும் அமைப்பினர் போலீசார் மற்றும் அதிகாரிகளிடம் உரிய முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஒலிபெருக்கிகளை பயன்படுத்த போலீசாரிடம் அனுமதி பெற வேண்டும். கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை பயன்படுத்த கூடாது.

விநாயகர் சிலை அமைவிடம் தீ தடுப்பு வசதிகளுடன் அமைந்திருக்க வேண்டும். அங்கு எளிதில் தீப்பற்றும் பொருட்களை வைத்திருக்க கூடாது. மேலும் சிலை அமைவிடத்தில் முதலுதவி பொருட்கள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

விநாயகர் சிலைக்கு அலங்காரம் செய்வதற்காக தற்காலிக மின்சாரம் பெற விரும்புவோர், உரிய அதிகாரிகளிடம் முன்கூ ட்டியே விண்ணப்பித்து ஒப்புதல் பெற வேண்டும். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத சிலைகளை மட்டுமே வைக்க வேண்டும். பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மற்றும் செயற்கை வண்ணங்களால் ஆன சிலைகளுக்கு அனுமதி இல்லை.

விநாயகர் சிலையின் உயரம் 10 அடியை தாண்டி இருக்க கூடாது. மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற மத வழிபாட்டு தலங்களுக்கு அருகில் சிலைகள் அமைப்பதை தவிர்க்க வேண்டும். மினிலாரி, டிராக்டர்கள் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களில் சிலைகளை கொண்டு செல்லலாம்.

மாட்டு வண்டி, மீன் வண்டி மற்றும் 3 சக்கர வாகனங்களில் சிலைகளை எடுத்து செல்ல அனுமதி இல்லை. விநாயகர் சிலைகளை சுமந்து செல்லும் வாகனத்தில் பயணிப்போர் எண்ணிக்கை மோட்டார் வாகன சட்டத்துக்கு உட்பட்டு இருக்க வேண்டும். சிலைகள் அமைவிடம் மற்றும் ஊர்வல பாதைகளில் பட்டாசுகள் வெடிக்க கூடாது. நீர்நிலைகளில் சிலைகளை விசர்ஜனம் செய்யும் முன்பாக மலர்கள், துணிகள், அலங்கார பொருட்களை தனியாக பிரித்துவிட வேண்டும்.

கோவையில் முத்தண்ணன் குளம், சிறுமுகை, எலகம்பாளையம், மேட்டுப்பாளையம் சுப்பிரமணியர் கோவில் மற்றும் தேக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் செல்லும் பவானி ஆறு, அம்பராம்பாளையம் ஆறு, நொய்யல் ஆறு, உப்பாறு, நடுமலை ஆறு, ஆனைமலை, முக்கோணம் ஆறு, பழத்தோட்டம், சிறுமுகை, சாடிவயல், வாளையார் அணை, ஆத்துப்பாறை, ஆழியாறு, குறிச்சிகுளம், குனியமுத்தூர் குளம், சிங்காநல்லூர் குளத்தேரி, வெள்ளக்கிணறு குளம் ஆகிய பகுதிகளில் மட்டும் விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...