உடுமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு போட்டியில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.


திருப்பூர்: தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

அக்டோபர் 5 முதல் 12 -ம் தேதி வரையில் தகவல் அறியும் சட்ட வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதை யொட்டி தொழிலாளர் நலத்துறையின் சார்பில் பள்ளி மாணவர்களிடையே தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் வார விழாவை முன்னிட்டு மாணவிகளுக்கு கட்டுரை மற்றும் ஸ்லோகன் எழுதும் போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். போட்டிகளைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ப. விஜயா தொடங்கி வைத்தார். தமிழ் ஆசிரியர்கள் வே. சின்னராசு, ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தொழிலாளர் நலத்துறையின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.

Newsletter

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...