கோவை துடியலூர் அருகே ரூ. 87 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு பூமி பூஜை

கோவை துடியலூரை அடுத்த அசோகபுரம் ஊராட்சியில் சுமார் 87 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகளை திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி தலைமை தாங்கி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.


கோவை: முதல்வர் கிராம இணைப்பு சாலை திட்டத்தில் கீழ் வட்டமலைபாளையம் பிரிவு பகுதியில் புதிய தார் சாலைகள் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.



அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் கீழ் ரூபாய் 59 லட்சத்து 85 ஆயிரத்து 995 மதிப்பில் வி.கே.வி.நகர் பகுதியிலுள்ள லட்சுமி நகர் ஒரு பகுதி, சி.எஸ்.ஐ சர்ச் பகுதி, ஸ்ரீ நகர் சாலை ஆகிய இடங்கள் மற்றும் காந்தி காலனி அருகேயுள்ள ஆதிதிராவிடர் காலனியில் சிமெண்ட் சாலைகள் அமைத்தல், ஆடியபாரதம் வீதியில் வடிகால் அமைத்தல், அசோகபுரம் ஊராட்சி அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மிதிவண்டி நிறுத்த இடம் அமைத்தல், ஆசிரியர் காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு புதிய கழிப்பறை கட்டுதல் உள்ளிட்ட பணிகளுக்கும் பூமி பூஜை நடைபெற்றது.



இதற்கு திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி தலைமை தாங்கி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இதற்கு மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஒன்றிய செயலாளர் கார்த்திக், ஒன்றிய கவுன்சிலர் கலா சாந்தாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இதில் திமுக தலைமை செயற்குழு உறுப்புனர் வீரபத்ரன், ஒன்றிய துணை செயலாளர் அசோக், மாவட்ட பிரதிநிதி செந்தில்ராஜா, மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் விஜயன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் குணசீலன், கிளை செயலாளர்கள் ரவிச்சந்திரன், சதகத்துல்லா, வார்டு கவுன்சிலர்கள் நடராஜன், நாகராஜ் என்கிற ஸ்ரீராம், சுதா செல்வகுமார், பிரசன்னா ராணி, முருகம்மாள், கட்சி நிர்வாகிகள் வேல்முருகன், ராஜகோபால், சங்கர், வேணுகோபால், வர்கீஸ், சேகர், சிவபாதம், அப்துல்சாத்தாக், ஜெயகுமார், போஜராஜன், ஸ்ரீதர், பாரதி, சரவணகுமார், சுந்தரம், சரவணன், ஒன்றிய இளைஞர் அணியினர் நிர்மல்குமார், மணிகண்டன், சிவராஜ், ராம்குமார், பிரவீன்குமார், புஷ்பராஜ், காண்ட்ராக்டர்கள் சுரேஷ், வசந்த், ஏ.எஸ்.பி அன் கோ மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...