ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டம்

கோவை சிவானந்த காலனி பகுதியில் தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர்கள் சங்கத்தினர் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.


கோவை: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி கால்நடை ஆய்வாளர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை சிவானந்த காலனி பகுதியில் தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர்கள் சங்கத்தினர் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.



இந்த உண்ணாவிரத போராட்டத்தில், "கால்நடை ஆய்வாளர் பயிற்சியை தொடங்கி கால்நடை ஆய்வாளர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி ஆறாவது ஊதிய குழுவில் வழங்கப்படாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், முதுநிலை கால்நடை மருத்துவ மேற்பார்வையாளர்களுக்கு அடுத்த கட்ட பதவி உயர்வு வழங்க வேண்டும், அனைத்து கால்நடை மருந்தகங்களிலும் கால்நடை ஆய்வாளர் பணியிடம் தோற்றுவிக்க வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்படுகின்றன.

இதில் கோவை ஈரோடு திருப்பூர் நீலகிரி ஆகிய மாவட்டங்களை சார்ந்த தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர்கள் சங்கத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தை ஓய்வு பெற்ற கால்நடை ஆய்வாளர் சங்க மாநிலத் தலைவர் சின்னசாமி துவக்கி வைத்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...