உடுமலை ஏழுமலையான் கோவிலில் அடிப்படை வசதிகள் செய்து தர பக்தர்கள் கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது


திருப்பூர்: குடிநீர் உட்பட அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தினால் ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அதிருப்தி.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் ஏழுமலையான் கோவில் உள்ளது. மலை அடிவாரத்தில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள இந்த கோவிலில் மூலவராக ஏழுமலை வெங்கடாசலபதியும் உற்சராக சீனிவாச பெருமாளும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்கள்.

அது தவிர கோவில் வளாகத்தில் வேணுகோபாலசாமிக்கு தனி சன்னதியும் அமைந்துள்ளது.

இங்கு வாரந்தோறும் சனிக்கிழமையன்று ஏழுமலையானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது.

கோவில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளதால் புரட்டாசி மாதத்தில் வருகின்ற சனிக்கிழமைகளில் மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் கடந்த மூன்று சனிக்கிழமைகளில் ஏழுமலையானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதில் சுற்றுப்புற கிராமம் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர்.



ஆனால் அடிப்படை அத்தியாவசிய தேவையான குடிதண்ணீர் வசதி செய்து தரப்படவில்லை. இதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வந்தனர். மேலும் குடிதண்ணீர் வசதி ஏற்படுத்தித் தருமாறு வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை இந்த சூழலில் புரட்டாசி மாதத்தின் இறுதி சனிக்கிழமை விழா நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக ஏராளமான பக்தர்கள் திரளக் கூடிய வாய்ப்பு உள்ளது.

போதிய மழைப்பொழிவு இல்லாததால் வனப் பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகளிலும் நீர்வரத்து இல்லை. இதனால் தண்ணீர் கிடைப்பது சவாலான விஷயமாகும். எனவே ஏழுமலையான் கோவிலுக்கு வருகை தருகின்ற பொதுமக்கள் நலன் கருதி ஆங்காங்கே தற்காலிக குடிநீர் தொட்டிகள் அமைத்து குடிநீர் வசதி கிடைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...