உடுமலை அருகே திருமூர்த்தி பாசன விவசாயிகள் ஆலோசனை கூட்டம்

திருப்பூர் அருகே மலைகளில் இருந்து வரும் தண்ணீர் காண்டூர் கால்வாய் வழியாக செல்வதை விவசாய நிலங்கள் அருகிலுள்ள நீர் நிலைகளில் செல்ல வழி வகை செய்ய வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: பாசனத்திற்கு தண்ணீர் திறக்ககோரி விவசாயிகளை ஒன்று திரட்டி போராட்டத்துக்கு ஆதரவு சேர்க்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி நகர், வலையபாளையம்,ராவணாபுரம், தேனூர்புதூர் மற்றும் அர்த்தநாரி பாளையம் போன்ற வருவாய் கிராமங்களில் உள்ள விவசாயிகள் ஒன்றினைந்து பாலாற்றுக்கு தெற்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைக்கு வடக்கே உள்ள விவசாய நிலங்கள் கடுமையாக வறட்சி காரணமாக தென்னை மரங்கள் நிறைந்த பகுதி தண்ணீர் இல்லாமல் பாலைவனமாக மாறும் நிலையில் உள்ளது எனவே தண்ணீர் பாசனம் வேண்டிய ஆலோசனை கூட்டம் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பாக நடத்தப்பட்டது.

1. அரசக்கு பாசனம் வேண்டி கோரிக்கை

2. விவசாயிகளை ஒன்று திரட்டி போராட்டத்துக்கு ஆதரவு சேர்க்க வேண்டும்.

3. மலைகளில் இருந்து வரும் தண்ணீர் காண்டூர் கால்வாய் வழியாக செல்கிறது அதை விவசாய நிலங்கள்அருகிலுள்ள நீர் நிலைகளில் செல்ல வழி வகை செய்ய வேண்டும்.

4. பாலாற்றில் திருமூர்த்தி அணை கட்டிய பின்னர் இயற்கையான முறையில் கிடைக்கும் நீர் தடை பெற்றதைத் மீண்டும் பெற வழி வகை செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...