திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி நகர் அரசு பள்ளியில் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பூர்: சாலை பாதுகாப்பு பற்றிய அறிவுரைகளையும் மற்றும் அதன் விதிமுறைகளையும் பள்ளி மாணவர்களுக்கு காவல்துறையினர் விளக்கினர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டத்திற்கு உட்பட்ட அமராவதி நகர் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ மாணவியருக்கு அமராவதி நகர் காவல் துறை மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை இணைந்துசாலைப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) M.S.மணிகண்டன் தலைமை தாங்கினார்.

இதில் சிறப்பு விருந்தினராக அமராவதி நகர் காவல்துறை உதவி ஆய்வாளர் சண்முக மூர்த்தி கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு பற்றிய அறிவுரைகளையும் மற்றும் அதன் விதிமுறைகளையும் எடுத்துரைத்தார். எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் S.A.I நெல்சன் அவர்கள் கலந்து கொண்டு சாலைப் பாதுகாப்பில் என் பங்கு என்ற தலைப்பில் கருத்துகளை எடுத்துரைத்தார்.

இதில் மாணவர்களுக்கு சாலைப் பாதுகாப்பு பற்றிய கட்டுரை மற்றும் ஓவியப்போட்டி நடைபெற்றது அப்பள்ளியின் மாணவ மாணவிகள் இதில் பங்கு பெற்றார்கள். இந்நிகழ்வில் பள்ளியின் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்