புரட்டாசி கடைசி நாள் - மலைமந்திரிபாளையத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத கதிராய பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மலைமந்திரிபாளையத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத கதிராய பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனியை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.


திருப்பூர்: 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் சிறப்பு பூஜையில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மலைமந்திரிபாளையத்தில் சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத கதிராய பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. குழந்தை இல்லாதவர்கள், தொழில் பிரச்சனைகள் உள்ளவர்கள் இக்கோவிலுக்கு வந்து வழிபட்டு சென்றால் 60 நாட்களுக்குள் வேண்டும் வரங்களை நிறைவேற்றி தரும் ஸ்தலமாக இத்திருக்கோவில் விளங்குகிறது.



ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் சனிக்கிழமை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் நிலையில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையான இன்று கதிராய பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இரவு கோவில் கருவறை மாடத்தில் வைக்கப்பட்டிருந்த பெருமாள் சிலை மற்றும் கன்னிமார் சிலைகளை கீழே இறக்கி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக காலை முதல் மூலவர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. திருப்பூர், கோவை,மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அனைத்து பக்தர்களுக்கும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலை மீண்டும் பெருமாள் மற்றும் கன்னிமார் சிலைகளுக்கு கபால பூஜை செய்யப்பட்டு திரு வீதி உலாவுடன் விழா நிறைவடைகிறது.

இந்நிகழ்வினை கோவில் கமிட்டி நிர்வாகிகள் செல்வராஜ்,நடராஜன், முருகேசன்,பழனிச்சாமி,வேலுச்சாமி,சிடிசி பழனிச்சாமி, சரவணன் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

Newsletter

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...