பல்லடம் கிளைச்சிறை முன்பு காரை பார்க்கிங் செய்ய முயன்ற போது பாதாள சாக்கடையில் இறங்கியதால் பரபரப்பு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளைச்சிறை முன்பு மூடப்படாமல் இருந்த பாதாள சாக்கடை முன்பு காரை பார்க்கிங் செய்ய முயன்றபோது, பாதாள சாக்கடையில் இறங்கியதால் பரபரப்பு நிலவியது.


திருப்பூர்: தேனீர் அருந்துவதற்காக பல்லடம் கிளைச் சிறை முன்பு நபர் ஒருவர் காரை நிறுத்த முயன்ற போது மூடப்படாமல் இருந்த பாதாள சாக்கடை குழுவில் இறங்கி கார் விபத்துக்குள்ளானது. அவற்றை ரெக்கவரி வேன் மூலம் குழியில் இருந்து மீட்டனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நீதிமன்றம், கிளைச் சிறை, பழைய காவல் நிலையம், பத்திரப்பதிவு அலுவலகம் என அரசு அலுவலகங்கள் அதிகம் உள்ள மங்கலம் சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும் நிலையில் பல்லடம் கிளைச்சிறை முன்பு பாதாள சாக்கடை பழுதாகி ஒரு வருடம் ஆகியும் மூடப்படாமல் உள்ளது.

கிளைச்சிறை, நீதிமன்றம் மற்றும் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வருவோர் பல்லடம் கிளைச் சிறை முன்பு தங்களது வாகனங்களை நிறுத்துவது வழக்கம். இந்நிலையில் கிளைச்சிறை முன்பு மூடப்படாத பாதாள சாக்கடையால் கடந்த எட்டு மாதங்களில் பல்வேறு வாகனங்கள் பாதாள சாக்கடை குழியில் இறங்கி விபத்துக்குள்ளாகி வருவது தொடர் கதையாகி வருகிறது.



இன்று மங்கலம் சாலையில் படியூர் நோக்கி தனது காரில் வந்த சத்தியமூர்த்தி என்பவர் தேனீர் அருந்துவதற்காக பல்லடம் கிளைச் சிறை முன்பு தனது காரை நிறுத்த முயன்ற போது மூடப்படாமல் இருந்த பாதாள சாக்கடை குழுவில் இறங்கி கார் விபத்துக்குள்ளானது.



ரெக்கவரி வேன் மூலம் காரை குழியில் இருந்து மீட்டுள்ளனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் மங்கலம் சாலையில் இது போன்ற விபத்துக்களை தவிர்க்க மூடப்படாமல் உள்ள பாதாள சாக்கடையை உடனடியாக மூட பல்லடம் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...