கலாம் பிறந்த நாள் - பல்லடம் அருகே சிலம்பம் சுற்றி நெழிகி ஒழிப்பு பற்றி மாணவர்கள் விழிப்புணர்வு

ஏவுகனை நாயகன் ஏபிஜே அப்துல்கலாமின் பிறந்த தினத்தை முன்னிட்டு பல்லடம் அருகே கேத்தனூரில் 92 நிமிடங்கள் இடைநில்லாமல் சிலம்பம் சுற்றி நெகிழி ஒழிப்பு குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: சிலம்பம் சுற்றும் நிகழ்வின் தொடர்ச்சியாக மரம் வளர்ப்பு குறித்தும், நெகிழி ஒழிப்பு குறித்தும், மாணவர்களும், பெற்றோர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.



பாரத தேசத்தின் முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா டாக்டர். ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் 92 வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கேத்தனூர் ஊராட்சி நிர்வாகம் மற்றும் நம் கை சிலம்பம் அமைப்பினர் இணைந்து மரம் வளர்ப்பு மற்றும் நெகிழி ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 200 மாணவர்கள் பங்கேற்ற 92 நிமிடங்கள் இடைநில்லாமல் சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி கேத்தனூர் அரசு பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக காமநாயக்கன்பாளையம் காவல் ஆய்வாளர் ரவி, கேத்தனூர் ஊராட்சி தலைவர் சித்ரா ஹரி கோபால், ஆகியோர் கலந்து கொண்டனர்.



நம் கை சிலம்பம் அமைப்பின் பயிற்சியாளர் சுதாகர் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற சிலம்பம் சுற்றும் நிகழ்வின் தொடர்ச்சியாக மரம் வளர்ப்பு குறித்தும், நெகிழி ஒழிப்பு குறித்தும், மாணவர்கள், பெற்றோர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.



மேலும் சிலம்பம் சுற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ்கள், பதக்கங்கள், மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

Newsletter

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...