மாற்றுத்திறனாளி குழந்தையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் தர்ணா போராட்டம்

தனக்கு சேர வேண்டிய நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளி குழந்தையுடன் பெண் ஒருவர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.


கோவை: தனக்கு வர வேண்டிய நிலத்தை உறவினர்கள் தனக்கு தெரியாமல் விற்று விட்டதாகவும், அந்த பங்கை கேட்டு எட்டு வருடங்கள் போராடி வருவதாகவும் பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. இதனையொட்டி பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் அவர்களது குறைகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் அருகே உள்ள காந்திபுரம் 1-வது வீதியை சேர்ந்த தவுலத் என்ற பெண் அவரது மாற்றுத்திறனாளி மகள் மற்றும் மகனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டார்.



அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று அப்பெண்ணையும் குழந்தையையும் அகற்ற முயன்றனர். ஆனால் அவர் வர மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பரபரப்பு சூழல் உருவானது.



பின்னர் போலீசார் அவரை சமாதானம் செய்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பதற்கு அழைத்து சென்றனர். இது குறித்து தவுலத் கூறுகையில் தங்களுக்கு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 8 1/2 ஏக்கர் நிலப்பரப்பில் இடம் உள்ளதாகவும், அந்த இடத்தை தனக்குத் தெரியாமல் தனது உறவினர்கள் சிலர் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த திமுக பிரமுகருக்கு விற்று விட்டனர் எனவும், அந்த இடத்தில் எனக்கு பங்கு வர வேண்டும் என்ற நிலையில் எனக்கு எந்தவித பங்கும் தரவில்லை என தெரிவித்தார்.

இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்த அவர் சுமார் 8 ஆண்டுகளாக இது தொடர்பாக போராடி வருவதாக தெரிவித்தார். எனவே உரிய நடவடிக்கை எடுத்து எனக்கு வர வேண்டிய பங்கை மீட்டு தர வேண்டும் என்றார். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் குழந்தைகளுடன் திடீரென சாலை மறியலில் ஈடுப்பட்டு தர்ணா செய்த பெண்ணால் பரபரப்பு நிலவியது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...