விளையாட்டுத்துறையில் சாதிக்க மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும் - மடத்துக்குளத்தில் முன்னாள் இந்திய அணி பயிற்சியாளர் அறிவுரை

உடலை கட்டுக்கோப்பாக வைப்பதற்கும் நீண்ட ஆயுளுடன் இருப்பதற்கு விளையாட்டு மிகவும் முக்கியமாக கருதப்படுவதாக இந்திய அணி பயிற்சியாளர் ஸ்டாலின் நாகராஜன் கூறினார்.


திருப்பூர்: விளையாட்டுத்துறையில் சாதிக்க மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என முன்னாள் இந்திய அணி பயிற்சியாளர் ஸ்டாலின் நாகராஜன் மடத்துக்குளத்தில் நடைப்பெற்ற விளையாட்டு விழாவில் அறிவுரை கூறியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் ஜே எஸ் ஆர் கல்வி குழுமத்தில் விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு முன்னாள் இந்திய அணியின் சிறந்த பயிற்சியாளர் ஸ்டாலின் நாகராஜன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஜே எஸ் ஆர் கல்வி குழுமங்களின் தாளாளர் எஸ் ராஜ்குமார் தலைமை வகித்தார். செயலாளர் சதீஷ்குமார் விழாவிற்கு முன்னிலை வகித்தார். விழாவில் ஸ்டாலின் நாகராஜ் அவர்கள் பேசும் பொழுது.

கொரோனா காலகட்டத்தில் ஏராளமானோர் இந்தியாவில் உயிரிழந்த நிலையில் ஒரு விளையாட்டு வீரர் கூட கொரனாவால் உயிர் இழக்க வில்லை காரணம் விளையாட்டு தான் மேலும், உடலை கட்டுக்கோப்பாக வைப்பதற்கும் நீண்ட ஆயுளுடன் இருப்பதற்கு விளையாட்டு மிகவும் முக்கியமாக கருதப்படுகின்றது. விளையாட்டுத்துறையில் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி சாதிக்க வேண்டும் உட்பட பல்வேறு கருத்துக்களை பேசினார் .

விளையாட்டு விழாவில் மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை சிறப்பு விருந்தினர் ஸ்டாலின் நாகராஜன் ஏற்றுக்கொண்டார் . பள்ளியின் சிறந்த விளையாட்டு வீரர்கள ஒலிம்பிக் தீபத்தை ஏந்தி வலம் வந்தனர்.



மழலையர் குழந்தைகளின் உடற்பயிற்சி, வண்ணமயமான பாராசூட் உடற்பயிற்சி, ஏரோபிக்ஸ் டான்ஸ், சிலம்பம் யோகா போன்ற நிகழ்வுகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.



இந்த நிகழ்வில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...