கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு ஏர் கலப்பையுடன் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விவசாய தொழிலாளர் நல வாரியத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். கூலி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்று விவசாய தொழிலாளர்கள் வலியுறுத்தினர்.


கோவை: தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் துரைசாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மண்வெட்டி, ஏர் கலப்பையுடன் வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் விவசாய தொழிலாளர்களுக்கு முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியால் கொண்டுவரப்பட்ட நல வாரியம் கடந்த அதிமுக ஆட்சியில் கலைக்கப்பட்டது.

கலைக்கப்பட்டு விவசாய தொழிலாளர்களுக்கு உதவாத உழவர் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. எனவே இதனை கைவிட்டு விவசாய தொழிலாளர் நல வாரியத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும், கூலி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் 30-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...