பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமுதல் செய்ததுடன், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமுதல் செய்ததுடன், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாநகரப் பகுதியில் போதைப்பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தல், விற்பனையை தடுக்கும் வகையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, வடவள்ளி காவல் ஆய்வாளர் இப்ராஹிம் பாதுஷா தலைமையிலான போலீசார் கணுவாய் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காரில் இருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த இருவரிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து காரை முழுமையாக சோதனை செய்ததில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மூட்டைகளாக பதுக்கி வைத்து கடத்தி வரப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, காரில் இருந்த சுமார் 450 கிலோ புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், காரில் இருந்த இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ் குமார் மற்றும் தஸ்காட் என்பது தெரியவந்தது. இவர்கள் பெங்களூரில் இருந்து கோவைக்கு புகையிலைப் பொருட்களை கடத்தி வந்ததும் விசாரணையில் உறுதியானது.

இதனைத் தொடர்ந்து, இருவரையும் போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கோவை புறநகர் பகுதிகளில் உள்ள ஒருவரிடம் ஒப்படைக்கப்பட இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த கடத்தலுக்கு பின்னால் உள்ள நபர்கள் யார், எத்தனை நாட்களாக இந்த விற்பனை வலையமைப்பு செயல்பட்டு வருகிறது, கோவையில் யாருக்கெல்லாம் புகையிலைப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டன என்பது குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...