திருப்பூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்பட்ட 3,81,200 ரூபாய் பணம் பறிமுதல்

திருப்பூர் காங்கேயம் சாலை பகுதியில், பிஎன் ரோடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் நான்கு சக்கர வாகனத்தில் கொண்டுவரப்பட்ட 3 லட்சத்து 6 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.



திருப்பூர்: தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் 64 பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் சுழற்சி அடிப்படையில் சோதனை தீவிர படுத்தப்பட்டுள்ளது.



இந்நிலையில் திருப்பூர் காங்கேயம் சாலை பகுதியில் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது பிஎன் ரோடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் நான்கு சக்கர வாகனத்தில் 3 லட்சத்து 6 ஆயிரத்து 500 ருபாய் பணத்தை உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்ததை தொடர்ந்து அதனை நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.



இதே போல் செந்தில்குமார் என்பவர் 74 ஆயிரத்து 600 ரூபாய் பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்ததை தொடர்ந்து அதையும் பறிமுதல் செய்த நிலை கண்காணிப்பு குழுவினர், பறிமுதல் செய்யப்பட்ட 3 லட்சத்து 81 ஆயிரத்து 200 ரூபாய் பணத்தை மாநகராட்சி ஆணையாளரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரமான பவன் குமாரிடம் ஒப்படைத்தனர்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...