பிஏபி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடக்கோரி தாராபுரத்தில் விவசாயிகள் சாலை மறியல் – போக்குவரத்து பாதிப்பு

பிஏபி பாசன வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடாத பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து பொன்னாபுரம் பிரிவு என்ற இடத்தில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் பகுதியில் ருத்ராவதி, செங்காளிபாளையம், கணபதிபாளையம், சுங்கிலியம்பாளையம் உள்ளிட்ட பி.ஏ.பி. பாசனம் பெறும் பகுதிகளுக்கு கடந்த மார்ச் மாதம் 27-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு முதல் சுற்று தண்ணீர் விடப்பட்டது. முதல் சுற்று தண்ணீர் குறிப்பிட்ட கால இடைவெளியில் விடப்பட்ட நிலையில், 2-வது சுற்று தண்ணீர் இதுநாள் வரை திறக்கப்படாததால் முதல் சுற்று தண்ணீரை நம்பி பயிர்செய்த விவசாயிகள் தொடர்ந்து செய்த பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் போனது.

இதனால் பயிர்கள் கருகிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுபற்றி குண்டடம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் முறையிட்டு விரைந்து தண்ணீர் திறக்கக் கோரியும் பொதுப்பணித்துறையினர் செவி சாய்க்காத காரணத்தினால் நேற்று முன்தினம் பி.ஏ.பி. பாசனம் பெறும் ஆயக் கட்டு பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நீண்ட நேரமாகியும் அதிகாரிகள் யாரும் வராத நிலையில் பல்லடம் பொதுப்பணித்துறை எஸ்.டி.ஓ.நேரில் வந்து விவசாயிகளிடையே பேசினார்.



அப்போது விரைந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர். இதனால் பொதுப்பணித்துறை அலுவலக வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. இந்நிலையில் இன்று தாராபுரம் கோவை மாநில நெடுஞ்சாலையில் பொன்னாபுரம் பிரிவு என்ற இடத்தில் விவசாயிகள் 500-க்கும் மேற்பட்டோர் பிஏபி பாசன வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடாத பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட நிலையில் பேருந்தில் கல்லூரி செல்வதற்காக காத்திருந்த மூன்று மாணவிகளை விவசாயிகள் காரில் அழைத்துச் சென்று பல்லடம் பேருந்து நிலையத்தில் மூன்று மாணவிகளை விவசாயிகள் இறக்கி விட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...