தேனியில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரை கோவை மத்திய சிறைக்கு கொண்டு வரும் வழியில், தாராபுரம் ஐடிஐ கார்னர் பகுதியில் எதிரே வந்த வாகனம், காவல்துறை மோதியதில் சவுக்கு சங்கர் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்.
கோவை: பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக பதியப்பட்ட வழக்கில் இன்று அதிகாலை யூடியூபர் சவுக்கு சங்கர் தேனியில் கைது செய்யப்பட்ட நிலையில்,கைதுக்கு பிறகான ஒரு பரபரப்பான நிகழ்வில், சவுக்கு சங்கர் உள்ளிட்ட மூன்று பேர் அடங்கிய காவல்துறை வாகனம் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று நள்ளிரவு 3 மணி அளவில் தேனியில் தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளனர். தேனியில் இருந்து
கோவையில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்திற்கு அவரை காவல்துறை வாகனம்.மூலம் அழைத்து வந்து கொண்டிருந்தனர்.
அப்போது, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஐடிஐ கார்னர் பகுதியில் எதிரே வந்த வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் பாதிக்கப்பட்ட சவுக்கு சங்கர் உள்ளிட்ட மூவர் தாராபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து குறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.