கோவை சுகுணாபுரத்தில் சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நடனமாடி உற்சாகம்

சக்தி மாரியம்மன் கோவிலில் நேற்று நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்று, பக்தர்களுடன் இணைந்து ஜமாப் இசைக்கேற்றவாறு நடனமாடி அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.


கோவை: கோவை சுகுணாபுரம் மைல்கல் பகுதியில் சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக நேற்று (17.05.2024) திருவிளக்கு பூஜை நடைபெற்றது.இந்த திருவிளக்கு பூஜையில் முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி, நல்லறம் அறக்கட்டளையின் தலைவரும் சமூக ஆர்வலருமான எஸ்.பி. அன்பரசன் மற்றும் சகோதரர் செந்தில்குமார் ஆகியோர் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



தொடர்ந்து திருவிளக்கு பூஜையை வித்தியாதேவி வேலுமணி தனது மகளுடன் இணைந்து குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பக்திபரவசத்துடன் திருவிளக்கிற்கு சந்தனம், குங்கும் இட்டு, மலர் தூவி மனதார பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.அதைதொடர்ந்து முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி, நல்லறம் அறக்கட்டளையின் தலைவரும் சமூக ஆர்வலருமான எஸ்.பி.அன்பரசன், சகோதரர் செந்தில்குமார் ஆகியோருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பாக பரிவட்டம் கட்டி முதல்மரியாதை அளிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று எஸ்.பி.வேலுமணி பக்தர்களுடன் இணைந்து ஜமாப் இசைக்கேற்றவாறு நடனமாடி அனைவரையும் உற்சாகப்படுத்தினார். அதைதொடர்ந்து ஆலயத்திற்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Newsletter

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...