கோவையில் இன்று ஆசியா நகை கண்காட்சி தொடக்கம் - பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு

பெங்களுரு கஜராஜ் ஜூவல்லரி, ஸ்ரீகணேஷ் டயமன்ட் ஜூவல்லரி, கேயா ஜூவல்லர்ஸ், டில்லியை சேர்ந்த ஷேகல் ஜூவல்லர்ஸ், மும்பை நேகா கிரியேஷன்ஸ், மும்பை ரேணுகா பைன் ஜூவல்லர்ஸ், கோவை கற்பகம் ஜூவல்லர்ஸ் உட்பட பல முன்னணி நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்றுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.



கோவை: கோவை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த நுண் கலை நகை கண்காட்சி மற்றும் விற்பனை, ஆசியா நகை கண்காட்சி 2024, கோவை நகருக்கு மீண்டும் திருமண மற்றும் விழாக்காலத்திற்கான வருகை தந்துள்ளது.



இந்தியாவின் மிகச்சிறந்த 30 நகை வடிவமைப்புகள் மற்றும் பெயர் பெற்ற நகை வகைகள் ஒரே இடத்தில் வாங்க முடியும். கோவை ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள தாஜ் விவான்டா ஓட்டலில், 2024 ஜூன் 14, 15, 16 ஆகிய நாட்களில் நடக்கிறது.

ஆசியா நகை கண்காட்சி 2024, தென்னிந்தியாவின் மிகவும் கவர்ச்சிரமான, முக்கியத்துவம் வாய்ந்த நகை கண்காட்சி மற்றும் விற்பனையாக உள்ளது. இந்த கண்காட்சி கோவை ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள தாஜ்விவான்டா ஓட்டலில், 2014 ஜூன் 14, 15, 16 ஆகிய தேதிகளில் காலை 10.30 மணி முதல் இரவு 8.00 மணிவரை நடக்கிறது. இந்த தனித்துவமிக்க கண்காட்சி முதல் முறையாக நடக்கிறது.

எப்போதும் கண்டிராத நகை வடிவமைப்புகள், இந்திய அளவில் தேர்வு செய்யப்பட்ட நகைககள் ஒரே இடத்தில் வாங்க முடியும்.



ஆசியா நகை கண்காட்சி 2024ஐ, பேஷன் டிசைனர் மற்றும் நகை வடிவமைப்பாளர் அபர்ணா சுங்கு, ஜிடோ கோவை அமைப்பின் தலைவர் ராகேஷ் மேத்தா ஆகியோர் இன்று ஜூன் 14 மதியம் 12.00 மணி அளவில் துவக்கி வைத்தனர்.



ஆசியா நகை கண்காட்சி ஒரு முக்கியமான, தனித்துவமிக்க நிகழ்வாக நடக்கிறது.



உயர்தர நுண்வகை தங்கம் மற்றும் வைர நகைகள் இடம் பெறுகிறது. அன்மையில் வெளியான நுண்தங்க நகைகள், வைரம், பிளாட்டினம், பராம்பரிய, திருமண நகைகள் இடம் பெற்றுள்ளன.



இவை தவிர, ஆன்டிக், அரிதான கல்கள் பதித்த நகைகள், குண்டன், ஜடாவு மற்றும் போல்கி, வெள்ளி நகைகள் இடம் பெற்றுள்ளன.

ஆசியா நகை கண்காட்சி, நகரில் நடக்கும் மிகவும் அருமையான நகை கண்காட்சி. அடுத்து வரும் திருமணம், விழாக்காலங்களுக்கு முன்பதிவுகள் செய்யப்படுகின்றன.



ஒரே இடத்தில் அனைத்து சிறந்த வடிவமைப்புமிக்க, அரிய வகை கற்கள் பதிக்கப்பட்ட நகைகள் விற்பனைக்கு வைக்கப்படுள்ளன. முன்பதிவும் செய்து கொள்ளலாம். சர்வதேச தரத்தில் தென்னிந்திய அளவில் நகைகளை வாங்க நேர்த்தியான இடம் இந்த கண்காட்சி.



பெங்களுரு, மும்பை, டில்லி, ஜெய்ப்புர், ஐதராபாத் மற்றும் கோவையை சேர்ந்த பல சொகுசான நகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மிகவும் கவர்ச்சிகரமான, அனைத்து பிராண்டுகளுக்குமான தளம் இது. சர்வதேச நகை வடிவமைப்புடன், இந்திய அளவிலான மிக உயர்ந்த பிராண்டுகள் இடம் பெறுகின்றன.



குறிப்பாக, பெங்களுரு கஜராஜ் ஜூவல்லரி, ஸ்ரீகணேஷ் டயமன்ட் ஜூவல்லரி, கேயா ஜூவல்லர்ஸ், டில்லியை சேர்ந்த ஷேகல் ஜூவல்லர்ஸ், மும்பை நேகா கிரியேஷன்ஸ், மும்பை ரேணுகா பைன் ஜூவல்லர்ஸ், கோவை கற்பகம் ஜூவல்லர்ஸ், டில்லி சிரியன்ஸ் ஜூவல்ஸ், மும்பை ஜிவா ஜூவல்லரி, ஐதராபாத் அகோயா ஜூவல்ஸ், மும்பை ருமிஸ் ஜூவல்ஸ், பிரிடம் ஜூவல்ஸ், மும்பை ஹவுஸ் ஆப் இபான், மும்பை டயமார்ன் ஜூவல்லரி, சென்னை அஞ்சலி, ஜெய்ப்புர் எப்இசட் ஜெம்ஸ், சென்னை என்ஏசி ஜூவல்லர்ஸ், பெங்களுரு ஸ்டைல் ஆரா மற்றும் பிற பிரசித்தி பெற்ற நிறுவனங்கள் பங்கேற்கின்றன.



ஆசியா நகை கண்காட்சியானது, செழுமையான, நேர்த்தியான கண்காட்சி. அமோக வரவேற்பை பெற்ற எச்ஆர்எஸ் மீடியாவின் காட்சி நிகழ்வு இது. கண்காட்சி பற்றிய மேலும் விபரங்கள் அறிய 9620461919 என்ற எண்ணிலோ, [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம். https://hrsmedia.in என்ற இணையத்தளத்தையும் பார்வையிடலாம் என்று கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...