கோவையில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு மும்முரம்: 5 இன்ச் முதல் 10 அடி வரை சிலைகள் தயார்

விநாயகர் சதுர்த்தி நெருங்கும் நிலையில், கோவையில் 5 இன்ச் முதல் 10 அடி வரையிலான விநாயகர் சிலைகள் தயாரிப்பு மும்முரமாக நடைபெறுகிறது. சுற்றுச்சூழல் நட்பு பொருட்களால் தயாரிக்கப்படும் இந்த சிலைகள் பலவகை வடிவங்களில் கிடைக்கின்றன.



கோவை: விநாயகர் சதுர்த்தி விழா நெருங்கி வரும் நிலையில், கோவையில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், சிலை தயாரிப்பாளர்கள் வேகமாக பணியாற்றி வருகின்றனர்.



மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் அறிவுறுத்தலின்படி, சிலைகளின் உயரம் 10 அடிக்கு மேல் இருக்கக் கூடாது என்பதால், 5 இன்ச் முதல் 10 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் களிமண் மற்றும் காகிதக்கூழ் உள்ளிட்ட பொருட்களால் தயாரிக்கப்பட்டுள்ளன.



இந்த ஆண்டு பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.



மச்ச விநாயகர், சிம்ம விநாயகர், பஞ்சமுக ஆஞ்சநேயருடன் கூடிய விநாயகர், Bike விநாயகர், கங்காருவுடன் கூடிய விநாயகர் என பல்வேறு வகையான சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.



தயாரிக்கப்பட்ட சிலைகளுக்கு டிஸ்டெம்பர் பெயிண்ட் கொண்டு வர்ணப்பூச்சு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மிகவும் ஆர்வத்துடன் விநாயகர் சிலைகளை வாங்கிச் செல்கின்றனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...