கேரளாவில் நிபா வைரஸ்: கோவை எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு

கேரளாவில் நிபா வைரஸ் பரவல் காரணமாக, கோவை-கேரளா எல்லைப் பகுதிகளில் 13 சோதனை சாவடிகளில் 24 மணி நேர கண்காணிப்பு பணி தொடங்கியுள்ளது. வாகனங்கள் சோதனை, கிருமி நாசினி தெளிப்பு உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.


Coimbatore: கேரளாவில் நிபா வைரஸ் காரணமாக ஒரு வாலிபர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தமிழக-கேரளா எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவின்படி, கோவை-கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள வாளையார், வேலந்தாவளம், மேல்பாவி, முள்ளி மீனாட்சிபுரம், கோபாலபுரம், வீரப்ப கவுண்டனூர், நடுப்புனி, ஜமீன்காலியாபுரம், வடக்காடு, செம்மனாம்பதி உள்ளிட்ட 13 சோதனை சாவடிகளில் மருத்துவ சுகாதாரத் துறையினர் சிறப்பு தற்காலிக முகாம்களை அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கேரளாவில் இருந்து கோவைக்கு வரும் கார், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் பயணிப்போரிடம் காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என கேட்டு பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும், வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

மாவட்ட சுகாதார அதிகாரி அருணா கூறியதாவது, "கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருவதை அடுத்து கோவை மாவட்டத்தில் உள்ள 13 சோதனை சாவடிகளிலும் சுகாதாரக் குழுவினர் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன."

அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் நிபா வைரஸ் அறிகுறியுடன் சிகிச்சைக்கு வரும் நபர்களின் விவரங்களை உடனடியாக அறிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் நிபா வைரஸ் பரவலைத் தடுக்க அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...