மேட்டுப்பாளையம் அனைத்து இந்து சமுதாய நந்தவனத்தில் மஹாளய அமாவாசைக்கு ஆயிரக்கணக்கானோர் தர்ப்பணம் கொடுக்க வருவதால், கூட்ட நெரிசலைத் தவிர்க்க பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
கோவை: மேட்டுப்பாளையத்தில் உள்ள அனைத்து இந்து சமுதாய நந்தவனத்தில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் தர்ப்பணம் கொடுக்க வருகை தருவார்கள் என்பதால் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆண்டுக்கு ஒரு முறை வரக்கூடிய மஹாளய அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் அவர்களது ஆசை மற்றும் ஆன்மா சாந்தி அடையும் என நம்பப்படுவதால் அன்றைய தினம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள அனைத்து இந்து சமுதாய நந்தவனத்தில் மஹாளய அமாவாசையை ஒட்டி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வருகை புரிவார்கள் என்பதால் அனைத்து இந்து சமுதாய நந்தவன நிர்வாகம் சார்பில் கூட்ட நெரிசலை தவிர்க்க முன்னேற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது.
ஒரே நேரத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 30,000 முதல் 40,000 பொதுமக்கள் வரை தர்ப்பணம் கொடுக்க வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தடுப்பு வேலைகள் அமைக்கப்பட்டு வரிசைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
தர்ப்பணம் கொடுக்க வருபவர்கள் பவானி ஆற்றில் புனித நீராடுவார்கள் என்பதாலும் பிண்டத்தை கரைக்க ஆற்றங்கரைக்கு செல்வது வழக்கமாக இருந்து வரக்கூடிய நிலையில் அங்கு கூடுதலாக பணியாளர்களை நியமித்தும் அங்கேயும் தடுப்புகள் அனைத்தும் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதிகாலை முதல் மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் சாலை மற்றும் ஊட்டி சாலை போன்ற பகுதிகளில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படும் என்பதால் அதற்கான ஏற்பாடுகளை மேட்டுப்பாளையம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குற்ற சம்பவங்களை தடுக்க 20க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வருகின்ற பக்தர்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் அனைத்தும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அனைத்து இந்து சமுதாய நந்தவனத்தின் தலைவர் என்.எஸ்.வி. ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.