உடுமலையில் அதிமுக சார்பில் சொத்து வரி உயர்வைக் கண்டித்து மனித சங்கிலி போராட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சொத்து வரி, மின் கட்டண உயர்வைக் கண்டித்து முன்னாள் அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. சுமார் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு சொத்து வரி மற்றும் மின் கட்டண உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவின்படி, முன்னாள் அமைச்சரும் உடுமலை சட்டமன்ற உறுப்பினருமான உடுமலை கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் இப்போராட்டம் நடத்தப்பட்டது.

போராட்டத்தில் பங்கேற்றவர்கள், "காப்பாற்றுவோம் காப்பாற்றுவோம் கஞ்சா மற்றும் மது போதை பிடியிலிருந்து கல்லூரி மாணவர்களை காப்பாற்றுவோம்", "வேதனையாச்சி வேதனையாச்சு விடியா தி.மு.க ஆட்சியில் வாக்களித்த மக்களின் வாழ்க்கையோ வேதனையாச்சு", "கெட்டுப் போச்சு கெட்டுப் போச்சு சட்டம் ஒழுங்கு கெட்டுப் போச்சு", "ஏறிப்போச்சு ஏறிப்போச்சு மின் கட்டண வரி சொத்து வரி ஏறி போச்சு" போன்ற கோஷங்களை எழுப்பினர்.



மேலும், சொத்து வரியை உயர்த்தியதோடு மக்களுக்கு விரோதமாக ஆட்சி செய்து வரும் திமுக அரசையும், முதலமைச்சர் ஸ்டாலினையும் கண்டித்து, "ஸ்டாலின் அரசே பதவி விலகு" என்று கோரிக்கை விடுத்தனர். போராட்டக்காரர்கள் பதாகைகளை ஏந்தியவாறு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இப்போராட்டத்தில் உடுமலை நகர செயலாளர் ஹக்கீம், ஒன்றிய செயலாளர்கள் அன்பர்ராஜன், பிரனேஷ் மற்றும் நகர மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த மனித சங்கிலி போராட்டம் அமைதியான முறையில் நடைபெற்று முடிவடைந்தது.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...