கோவையில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் மாநாடு: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

கோவையில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் மாநாடு போத்தனூரில் நடைபெற்றது. 'ஒழுக்கமே சுதந்திரம்' என்ற கருப்பொருளில் நடைபெற்ற இம்மாநாட்டில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.


கோவை: கோவை போத்தனூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் 'மகளிர் மாநாடு' இன்று நடைபெற்றது. இம்மாநாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.



நாட்டில் அதிகரித்து வரும் ஒழுக்கச் சீர்கேடுகளுக்கு எதிராக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி, 'ஒழுக்கமே சுதந்திரம்' என்ற கருப்பொருளில் அகில இந்திய அளவில் பரப்புரையை முன்னெடுத்தது. இதன் ஒரு பகுதியாக, கோவையில் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டன. இப்பரப்புரையின் மாநில அளவிலான இறுதி நிகழ்வாக இந்த மகளிர் மாநாடு நடைபெற்றது.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாநகரத் தலைவர் உமர் ஃபாரூக் மாநாட்டிற்கு தலைமை வகித்தார். மாநாட்டில், 'வேலிதாண்டும் வெள்ளாடுகள்' என்ற தலைப்பில் தற்கால குடும்பங்களின் பிரச்சினைகள் குறித்த நாடகம் அரங்கேற்றப்பட்டது.



ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் - தமிழ்நாடு & புதுச்சேரி மாநிலத் தலைவர் மௌலவி முஹம்மது ஹனீஃபா மன்பயீ தனது உரையில், "மனித சமூகம் சிறந்த ஒழுக்க மாண்புகளைக் கொண்டுள்ள வரை மட்டுமே வளர்ச்சியும், மேன்மையும் அடைந்திட முடியும். அவற்றை கடைபிடிக்கும் வரையில் மட்டுமே மனிதகுலம் நிலைகொண்டிருக்கும்" என்று குறிப்பிட்டார்.

அவர் மேலும், "மது, போதை உள்ளிட்ட தீமைகள் தற்காலத்தில் அதிகரித்து வரும் சூழலில், இறைவழிகாட்டுதல்களை ஏந்தியுள்ள இந்தச் சமூகம் அனைத்து தரப்பு மக்களையும் ஒழுக்க மாண்புகளின் அடிப்படையிலான வாழ்வியலின் அவசியம் குறித்து உணர்த்துவதுடன் அவர்களுக்கான முன்னுதாரணமாக இருப்பதும் நமது கடமை" என்று வலியுறுத்தினார்.

இம்மாநாட்டில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் நிர்வாகிகள், முக்கிய ஆளுமைகள், பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...