மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges ஆகியவற்றை 50 சதவீதம் குறைக்க வேண்டும் என கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.




கோவை:

மின்சாரத்துறையில் நிலையான கட்டணம் மற்றும் Demand Charges ஆகியவற்றை குறைக்க வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையனிடம் மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பினர் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.



மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருவதால், நிலை மற்றும் தேவை கட்டணங்களை (Demand - Fixed Charges) 50 சதவீதம் குறைக்க வேண்டும் என கூட்டமைப்பின் தலைவர் ஜெயபால் அமைச்சரிடம் வலியுறுத்தினார்.



மேலும், ரூப் டாப் சோலார் (Roof Top Solar) மின் உற்பத்தி திட்டத்திற்கு உலகிலேயே தமிழகத்தில் மட்டுமே நெட்வொர்க் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், அந்த நடைமுறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

“தமிழக ஜவுளித் தொழில்துறைக்கு ஆண்டுதோறும் 110 லட்சம் பேல் பருத்தி தேவைப்படுகிறது. ஆனால் மாநிலத்தில் ஆண்டுக்கு 5 முதல் 6 லட்சம் பேல் பருத்தி மட்டுமே விளைவிக்கப்படுகிறது. எனவே, பருத்தி விளைச்சலை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், அனைத்து தொழில்களுக்கும் தேவையான மூலப்பொருட்களை சேமித்து வைக்கும் வகையில் கிடங்கு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்,” என கூட்டமைப்பின் தலைவர் ஜெயபால் தெரிவித்தார்.

கோரிக்கைகளை கேட்டறிந்த அமைச்சர் செங்கோட்டையன், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளதாக கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...