நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.


Coimbatore: தமிழர்களின் தொன்மையான சோழர் வரலாற்றுப் பெருமையை 300 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்டெடுத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் விஜய் இதுவரை எந்தவித பாராட்டும் தெரிவிக்காதது ஏமாற்றமளிப்பதாக பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.



நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்தின் லெய்டன் பல்கலைக்கழகத்திலிருந்து தாயகம் திரும்பியிருப்பது தமிழகத்திற்கே பெருமை சேர்க்கும் வரலாற்றுச் சம்பவம் என்றும், ஆனால் மாநில முதலமைச்சர் இதுகுறித்து மௌனம் காக்கிறார் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.



“தமிழ் பண்பாட்டையும் சோழர் வரலாறையும் உலக அரங்கில் மீண்டும் உயர்த்திய பிரதமருக்கு ஒரு வார்த்தை நன்றி கூட தெரிவிக்காதது வெறும் மறதி அல்ல; அது திட்டமிட்ட அலட்சியம் போல தெரிகிறது” என்றும் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.



மேலும், செப்பேடுகள் தமிழகத்திற்கு வரும் நாளை அரசு சார்பில் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்றும் வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தள பதிவில், “இந்தியர் அனைவருக்கும் இது ஒரு மகிழ்ச்சிகரமான தருணம். 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்ப வருகின்றன. இதனை ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் ராப் ஜெட்டனுடன் இணைந்து பங்கேற்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளைக் கொண்ட இந்த செப்பேடுகளில் பெரும்பாலான எழுத்துக்கள் உலகின் மிகவும் அழகான மொழிகளில் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன், தனது தந்தை முதலாம் ராஜராஜ சோழன் வழங்கிய வாய்மொழி வாக்குறுதியை முறைப்படுத்தியதற்கான சான்றுகளாக இவை விளங்குகின்றன. சோழர்களின் பெருமை, கலாச்சாரம் மற்றும் கடற்படை திறனை இந்தியர்கள் பெருமையுடன் நினைவுகூர்கிறார்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.



அதேபோல், “இந்த செப்பேடுகளை பல ஆண்டுகளாக பாதுகாத்து வந்த நெதர்லாந்து அரசுக்கும், லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் நன்றி தெரிவிக்கிறேன்” என்றும் பிரதமர் மோடி தனது பதிவில் கூறியுள்ளார்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...