கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து தகவலறிந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, தண்ணீரை மாற்று வழியாக திருப்பி உடைந்த கரையை தற்காலிகமாக சீரமைத்தனர்.
கோவை: கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட விவசாயிகளின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்ட (பி.ஏ.பி.) வாய்க்காலில் இன்று கோவை செஞ்சேரிமலை அருகே திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் பெருமளவு தண்ணீர் அருகிலுள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து வீணானது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த பாசனத் திட்டம், ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீர் வழங்கி வருகிறது. இந்த ஆண்டும் பாசனத்திற்காக வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், இன்று ஏற்பட்ட இந்த உடைப்பு விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தகவலறிந்த விவசாயிகள் உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அதிகாரிகள் முதற்கட்டமாக மாற்று மதகுகள் வழியாக தண்ணீரை திருப்பிவிட்டனர். தொடர்ந்து, உடைந்த கரைப்பகுதியில் மண் கொட்டி தற்காலிக சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். தற்போது பாறாங்கற்கள் மூலம் கரையை வலுப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கடந்த நவம்பர் மாதம் வாவிபாளையம் பகுதியில் ஏற்பட்ட இதேபோன்ற வாய்க்கால் உடைப்பு சம்பவத்தில் அதிகாரிகள் தாமதமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன. ஆனால் இந்த முறை சில மணி நேரங்களிலேயே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததை விவசாயிகள் பாராட்டியுள்ளனர்.
இருப்பினும், பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பழமையான வாய்க்கால் பல இடங்களில் சிதிலமடைந்து காணப்படுவதால், எதிர்காலத்தில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க முழுமையான சீரமைப்பு மற்றும் கரை பலப்படுத்தும் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.