கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் கோவையில் வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டடோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

கோவை: கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் கோவை ரேஸ்கோர்ஸில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து பேசிய

மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர், ஈஸ்வரன்,

தமிழகத்தின் வேகமாக வளர்ந்து வரும் முக்கிய தொழில் மற்றும் கல்வி நகரங்களில் ஒன்றான கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் அவசியம் என பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.



இந்த நிலையில், மத்திய அரசால் மெட்ரோ திட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவதை கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் ரேஸ்கோர்ஸில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் முன்பு திரண்டனர். அவர்கள் மத்திய அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி, கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர், வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது, பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, 50-க்கும் மேற்பட்ட மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினரை காவல்துறையினர் கைது செய்து போலீஸ் வாகனங்களில் அழைத்துச் சென்றனர்.



போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன், கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும், தமிழகத்தின் வளர்ச்சிக்கு அவசியமான முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களை மேலும் தாமதப்படுத்தக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.

Newsletter

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...