மாநகராட்சிக்கு சொந்தமான சுமார் ரூ.16.6 கோடி மதிப்பிலான 1.57 ஏக்கர் அளவிலான இடங்கள் மீட்பு -மாநகராட்சி ஆணையாளர் தகவல்


கோயம்புத்தூர் மாநகராட்சியில் 4 மண்டலங்களிலுள்ள  மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்களை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.16.6 கோடி மதிப்பிலான 1.57 ஏக்கர் அளவிலான மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டு மாநகராட்சியின் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர் (பொ) காந்திமதி இன்று தகவல் தெரிவித்தார்.



இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் தெரிவிக்கையில், “கோயம்புத்தூர் மாநகராட்சியிலுள்ள பகுதிகளில் மாநகராட்சி பொது ஒதுக்கீட்டு இடங்களை உதவி நகரமைப்பு அலுவலர்கள் மூலம் இடங்களை கண்டறிந்து, விரைவில் மீட்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுவரை மாநகராட்சியிலுள்ள 5 மண்டலங்களிலிருந்து கடந்த 2016 நவம்பர் மாதம் மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்களை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.64.70 கோடி மதிப்பிலான 5.34 ஏக்கர் அளவிலான இடங்களும் டிசம்பர் மாதம் சுமார் ரூ.55.45 கோடி மதிப்பிலான 3.77 ஏக்கர் அளவிலான இடங்களும் மற்றும் 2017 ஜனவரி மாதம் சுமார் ரூ.26.2 கோடி மதிப்பிலான 2.72 ஏக்கர் அளவிலான மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களும் மீட்கப்பட்டு மாநகராட்சியின் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டும், மீட்கப்பட்ட இடங்களில் பூங்கா அமைத்தல், தோட்டங்கள் அமைத்தல், மரம் செடிகள் நடுதல் போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. 



அதனை தொடர்ந்து 03.02.2017 மற்றும் 04.02.2017 ஆகிய 2 தினங்களில் மட்டும் மாநகராட்சியிலுள்ள நான்கு மண்டலங்களான மேற்கு, வடக்கு, மற்றும்; தெற்கு ஆகிய வார்டு பகுதிகளில் மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்களை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.16.6 கோடி மதிப்பிலான 1.57 ஏக்கர் அளவிலும் மற்றும் மத்திய மண்டலம் வார்டு-71 திருச்சி சாலை, சுங்கம் தபால் நிலையம் மற்றும் நிர்மலா பள்ளிச் சாலை அருகில் சாலையோர ஆக்கிரமிக்கப்பட்ட கடைகளையும் அகற்றப்பட்டு  மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் என பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.



கோயம்புத்தூர் மாநகராட்சியின் மேற்கு மண்டலம், வார்டு-18, வீரகேரளம், டாட்டா, சின்மயா நகரில் பொது ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான 20 சென்ட் அளவிலான இடங்களும், வடக்கு மண்டலம், வார்டு-28, சரவணம்பட்டி, ராமநந்தா நகரில் பொது ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.12 கோடி மதிப்பிலான 122 சென்ட் அளவிலான இடங்களும் மற்றும் தெற்கு மண்டலம், வார்டு-92, குனியமுத்தூர், ஜெயகெந்ரா சிக்கந்தர் நகரில் பொது ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.1.6 கோடி மதிப்பிலான 15 சென்ட் அளவிலான இடங்களும் மற்றும் மத்திய மண்டலம் வார்டு-71 திருச்சி சாலை, சுங்கம் தபால் நிலையம் மற்றும் நிர்மலா பள்ளிச் சாலை அருகில் சாலையோர ஆக்கிரமிக்கப்பட்ட கடைகளையும் அகற்றப்பட்டு ஆகமொத்தம், மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்களை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.16.6 கோடி மதிப்பிலான 1.57 ஏக்கர் அளவிலான மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டு மாநகராட்சியின் அறிவிப்பு பலகை வைக்கப்ட்டுள்ளது.



மேலும், இதுபோன்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என  மாநகராட்சி ஆணையாளர் (பொ) காந்திமதி  தெரிவித்தார்.

Newsletter

கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717...

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...