அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு அரசு கல்லூரிகளில் பணி வழங்குவதை எதிர்த்து அரசு கல்லூரி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து ஆசிரியர்கள், ஊழியர்கள் என சுமார் 1000-ம் பேர் தமிழகத்தில் செயல்படும் அரசு கலை கல்லூரிகளில் பணியமர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் உள்ள 87 அரசு கல்லூரிகளின் ஆசிரியர்களும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

தொடர்ந்து, கோவை அரசு கலை கல்லூரி ஆசிரியர்களும், தமிழ்நாடு அரசு கலைக்கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தை சேர்ந்தோருமான 50க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இது குறித்து, தமிழ்நாடு அரசு கலைக்கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தின்  மாநில துணை தலைவர் வீரமணி கூறியதாவது :- 

கடந்த 2008-ம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து 319 பேர் சமூக நீதிக்கு எதிராக அரசு கல்லூரிகளில் பணியமர்த்தப்பட்டனர். தற்போது அதே நிலை நீடிக்கிறது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேலைக்கு சேர்ந்த பலர் லஞ்சம் கொடுத்ததன் மூலமாக பணியில் சேர்ந்தவர்கள். அங்கு நிர்வாக முறைகேடு ஏற்படும்போது பல்கலைக்கழகத்தில் உறுப்பு  கல்லூரிகளில் பணியமர்த்துவதை விடுத்து, அரசு கல்லூரிகளில் பணியமர்த்துவது நியாயமற்ற செயல். இதனால், 10 வருடத்திற்க் மேல் அரசு பணிக்காக காத்திருக்கும் பலருக்கு பாதிப்பு ஏற்படும். இந்த முயற்சியை அரசு கைவிட வேண்டும்.அதுவரை எங்கள் போராட்டம் தொடரும். 

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...