மு.க ஸ்டாலின் தாக்கப்பட்டதை கண்டித்து கோவையில் திமுகவினர் போராட்டம்

தமிழக சட்டசபையில் இன்று திமுக எதிர்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் அவைக்காவலர்களால் தாக்கப்பட்டதை கண்டித்து கோவையில் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

தமிழக சட்டசபையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. ஆனால் சபாநாயகர் அதை நிராகரித்துவிட்ததால், சட்டசபையில் அமளி ஏற்பட்டது. இதனால் திமுக உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாக அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர். இதில் திமுக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க.வில் பலர் தாக்கப்பட்டனர். இதனை கண்டித்து மு.க ஸ்டாலின் சென்னை மெரினாவில் உள்ள காந்தி சிலை முன்பு போராட்டம் நடத்தி வருகிறார். இதனை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதன் ஒருபகுதியாக, கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கோயமுத்தூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு கோவை திமுக இளைஞர் அணி சார்பில் கோட்டை அப்பாஸ் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் சட்டமன்ற உறுப்பினர் தனபாலுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

அதேபோல், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொங்கலூர் பழனிச்சாமி தலைமையில் 100க்கும் மேற்பட்ட திமுகவை சேர்ந்த தொண்டர்கள் தனபாலுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...