ஆதரவற்றோர்களுடன் மகிழ்ச்சி உரையாடலில் ஈடுபட்ட கோவை சுகுணா ரிப் வி பள்ளி மாணவர்கள்

கோவை சுகுணா ரிப் வி பள்ளி மாணவர்களால் "உதவும் உள்ளங்கள்" என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் மாணவர்கள் சில தொகைகளை திரட்டியுள்ளனர். 



அந்த தொகையினைக் கொண்டு இன்று கோவை ஈரநெஞ்சம் அறக்கட்டளை பராமரிப்பிலன் கீழ் செயல்பட்டு வரும் மாநகராட்சி ஆதரவற்றோர் காப்பகத்தில் உள்ள ஆதரவற்றவர்களுடன் உணவு மற்றும் கலை நிகழ்ச்சி என அவர்களுடன் ஒருநாள் இருந்து  கலந்துரையாடி முதியவர்களுக்கு ஆதரவு கூறி மாணவர்கள் மகிழ்வித்தனர்.



இதுகுறித்து சுகுணா ரிப் வி பள்ளி தலைமை ஆசிரியர் கூறுகையில், இது போன்ற பள்ளி மாணவர்கள் ஆதரவற்ற காப்பகத்திற்கு வருவதனால் அவர்களது வாழ்வில் பல அனுபவங்களை கற்றுக்கொள்ள முடிகிறது.

முதியவர்கள் மாணவர்கள் கலந்துரையாடுவதன் மூலம் மாணவர்கள் தங்களது தாய், தந்தை, முதியவர் என யாவரையும் காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வு சிறுவயதிலேயே ஏற்படுத்த முடியும்" என தெரிவித்தார்.



இதைத்தொடர்ந்து, காப்பகத்தில் இருந்து விடைபெறும்போது மாணவர்கள் அனைவரும் தங்களது தாய், தந்தையரை கடைசிவரை காப்பாற்றுவோம் என உறுதி மொழி எடுத்துக்கொண்டது அங்கிருந்தவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.



Newsletter

Flights Temporarily Diverted to Kochi After Compound Wall Collapse Near Coimbatore Airport

Following heavy rain and strong winds in Coimbatore today evening, a section of the compound wall near Coimbatore Intern...

கனமழை எதிரொலி: கோவை விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் விமானங்கள் கொச்சிக்கு திருப்பி விடப்பட்டது

கோவையில் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றால் சின்னியம்பாளையம் அருகே கோவை சர்வதேச விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்...

“Jayalalithaa’s Soul Is Punishing the AIADMK,” Says TVK Minister Sengottaiyan in Coimbatore

TVK Minister Sengottaiyan  launched a sharp attack on the AIADMK, stating that the party’s ongoing internal turmoil was...

Simplicity News Impact: Coimbatore Airport Authorities Restore Drinking Water Facility

Passengers and members of the public appreciated the swift action taken by airport authorities to restore the malfunctio...

நொய்டா தொழிலாளர்களுக்கு ஆதரவாக கோவையில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து கோவையி...

Prioritise Safety Measures: Salem ADRM Urges During Inspection at Tiruppur Railway Station

Salem Additional Divisional Railway Manager (ADRM) R. Saravanan inspected the ongoing Amrit Bharat Scheme works and main...