நீலகிரியில் இருந்து கர்நாடகாவிற்கு யானை தந்தம் கடத்திய மூன்று பேர் கைது


நீலகிரி மாவட்டம் சேரம்பாடியில் இருந்து யானை தந்தங்களை கடத்தி வருவதாக கர்நாடக மாநில குண்டல் பேட்டை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில், அவ்வழியாக வந்த காரை சோதனையிட்ட குண்டல்பேட்டை காவல் துறையினர் ஒரு காரில் சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புடைய யானை தந்தங்கள் கடத்தி வரப்பட்டதை கண்டறிந்தனர்.

இதைத்தொடர்ந்து, இக்கடத்தலில் ஈடுபட்ட சேரம்பாடியைச் சேர்ந்த சோமன் (50), எருமாடு பகுதியைச் சேர்ந்த மோகன் குஞ்சான் (45), கேரள மாநிலம் திருசூர் சேர்ந்த ஸ்டீபன் (44) ஆகிய மூன்று பேரையும் குண்டல்பேட்டை காவல் ஆய்வாளர் பிரமோத் குமார், புலனாய்வு குழு மற்றும் சிறப்பு அதிரடிப்படை நாகராஜ் ஆகியவர்கள் சுற்றி வழைத்து பிடித்தனர்.

இதைத்தொடர்ந்து, அவர்களிம் இருந்து 3 யானை தந்தம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு கேரள பதிவு எண் கொண்ட மாருதி கார் ஆகியவை பரிமுதல் செய்யப்பட்டது.

இதில், சோமன் என்பவர் கடந்த 2014 ஆம் ஆண்டு கல்லத்தனமாக துப்பாக்கி வைத்திருந்ததாக குண்டல்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் கோபி அவர்களால் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...