கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு குடும்பங்களுக்கு தலா 90 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. மொத்த தீர்வு தொகை ரூ.1.11 கோடி. பிரிந்து வாழ்ந்த 6 தம்பதிகள் மீண்டும் இணைந்தனர்.


Coimbatore: தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்படி கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் (Lok Adalat) ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மொத்த தீர்வு தொகை ரூ.1 கோடியே 11 லட்சத்து 42 ஆயிரம் ஆகும்.

கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி விஜயா தலைமையில் கோவை நீதிமன்றங்கள், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, சூலூர் மற்றும் மதுக்கரை நீதிமன்றங்களில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

இந்த விசாரணையில் விபத்தில் உயிரிழந்த இரு குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2024ஆம் ஆண்டு போத்தனூர் செட்டிபாளையம் சாலை பகுதியில் ஏற்பட்ட இரு சக்கர வாகன விபத்தில் உயிரிழந்த மித்ரகாந்த் குடும்பத்தினருக்கு இழப்பீடாக 90 லட்சம் ரூபாய் காசோலையாக வழங்கப்பட்டது.

அதேபோல், 2025ஆம் ஆண்டு ஆனைக்கட்டியிலிருந்து கோயமுத்தூர் மெயின் ரோட்டில் ஏற்பட்ட நான்கு சக்கர வாகன விபத்தில் உயிரிழந்த மணிராஜ் குடும்பத்தினருக்கு இழப்பீடாக 90 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

இம்மக்கள் நீதிமன்றத்தில் சமரசம் செய்யக்கூடிய சிறுகுற்ற வழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், நிலம் சொத்து பாகப்பிரிவினை, வாடகை விவகாரங்கள், தொழிலாளர் சம்பந்தப்பட்ட வழக்குகள், வங்கி கடன்கள், கல்விக்கடன்கள் தொடர்பான வழக்குகள், விவாகரத்து தவிர மற்ற குடும்ப பிரச்சனை வழக்குகள் மற்றும் நீதிமன்றத்தில் நிலுவையில் இல்லாத வழக்குகள் (Pre-Litigation) ஆகியவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இம்மக்கள் நீதிமன்றம் மூலம் 5 ஆண்டுகளுக்கு மேலாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த 58 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த மக்கள் நீதிமன்றத்தின் மூலம் பிரிந்து வாழ்ந்த 6 தம்பதிகள் திரும்பவும் இணைந்து வாழ தீர்வு காணப்பட்டது.

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி நடைபெற்ற இந்த மக்கள் நீதிமன்றம், சட்ட நடைமுறைகளை எளிமைப்படுத்தி, விரைவான நீதி வழங்குவதில் முக்கிய பங்காற்றியுள்ளது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...