இன்று உலக தாய்மொழி தினம், தாய் மொழியை கொண்டாடுவோம்!

உலகமெங்கும் உள்ள மக்கள் தங்கள் தாய் மொழியை கொண்டாடுவதற்காக கடந்த 1999-ம் ஆண்டு யுனெஸ்கோ மாநாட்டில் எடுக்கபட்ட முடிவின் தீர்ப்பே உலக தாய்மொழி தினம். தொடர்ந்து, கடந்த 2000-ம் ஆண்டு முதல் பிப்ரவர் மாதம் 21-ம் நாள் உலக தாய்மொழி தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கால மாற்றத்தால் உலக மக்கள் தங்கள் தாய்மொழியை மறந்து விடக்கூடாது என்பதற்காகவும், தாய் மொழி கல்வியை வலியுறுத்தும் விதமாகவும் இவ்விழா ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. 

அன்றைய பாகிஸ்தான் நாட்டில் அதிகமாக பேசப்பட்ட மொழியாக வங்கமொழி இருந்தது. உருது மொழி பேசுபவர்கள் எண்ணிக்கையில் மிகக் குறிந்த அளவிலேயே இருந்தனர். இருந்த போதிலும், கடந்த 1949-ம் ஆண்டு அந்நாட்டு அரசு உருது மொழியை அலுவல் மொழியாக அறிவித்தது. அரசின் இந்த அறிவிப்பு வங்கமொழி பேசுபவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதன் விளைவாக நாடெங்கிலும் பல போராட்டங்கள் வெடித்தன. போராட்டத்தின் விளைவாக பல மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தாய்மொழிக்காக போராடி வீழ்ந்த அந்த இளைஞர்களை நினைவு கூறும் வகையிலும் உலக தாய் மொழி தினம் கொண்டாடப்படுவது சிறப்பு. 

இந்த கோர சம்பவத்தின் விளைவாக வங்கதேசம் என்ற தனி நாடு உருவானது. தாய் மொழி என்பது தனக்கான தேவைகளை பூர்த்தி செய்ய உதவுவது மட்டுமல்ல. அது, ஒரு தேசத்தையே இரண்டாக பிரிக்கும் அளவிற்கு  வல்லமை பெற்றிருக்கிறது என்பது இந்த நிகழ்வின் மூலம் நாம் அறிய முடிகிறது. 

ஒரு தேசம் அளவில் சிறியதாக இருந்தாலும், தாய் மொழி பேசுபவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் அவர்களிடையே மொழிப்பற்று இருக்க வேண்டும். அப்போது, தான் அவர்களின் கலாச்சாரம், பண்பாடு மட்டும் வாழ்கை நெறிகளை காப்பாற்ற முடியும். ஏனெனில், இவ்வனைத்தையும் உள்ளடக்கிய ஒரு அன்னையே தாய்மொழி. 'ஒரு மொழி அழியும் போது, அங்கு ஒரு இனமே அழிகிறது' என்ற கூற்று இதற்கு சான்று. 

இன்றைய சூழலில் தாய் மொழி கல்வி முறை என்பது கொஞ்சம் கொஞ்சமாக புறக்கணிக்கப்பட்டு வருகிறது. வேலை வாய்ப்புக்காக இணைப்பு மொழியான ஆங்கிலத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தங்கள் தாய் மொழியை பிழையின்றி பேசவும், எழுதவும் தெரியாத ஒரு சந்ததியினரை நாம் உருவாக்கி வருகிறோம். 

உலகில் மிக அதிக அளவில் இலக்கிய நோபல் பரிசுக்களை வென்றவர்கள் பிரான்ஸ் தேசத்தினர்.  அவர்கள் தங்கள் தாய் மொழியான பிரஞ்சு மொழி பேசுவதை பெருமையாக கருதினர். ஒரு போதும் ஆங்கில மொழி தங்கள் தாய்மொழிக்குள் ஊடுறுவக் கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கின்றனர் அந்நாட்டு மக்கள். இதற்காக தனிச்சட்டம் இயற்றிய கதையும் பிரான்ஸ் நாட்டு வரலாற்றில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தி திணிப்பை எதிர்த்து பெரும் கிளர்ச்சி எழுந்த மாநிலம் தமிழ்நாடு. நடுவணரசின் இந்தி திணிப்பு முறைக்கு எதிராக மாணவர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் போராடினர். அப்போது பலர் படுகொலை செய்யப்படனர். தாய் மொழியை காக்க போராடிய நம் முன்னோர்களை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் சனவரி மாதம் 25-ம் நாள் மொழிப் போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. மொழிக்காக போராடி உயிர் நீத்தவர்களின் பிள்ளைகளாகிய நாமே, நம் குழந்தகளுக்கு தாய்மொழியை கற்று தர மறந்ததும், தாய்மொழியினை புறக்கணிப்பதும் வேதனை.! 

 

மொழி என்பது கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவதற்கு மட்டுமன்றி மற்ற உயிர்களிடத்தில் அன்பு செலுத்துதலையும், நன்னடத்தையையும் மற்றும் பன்பாட்டையும் வளர்க்கும் அன்னை என்று குழந்தைகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். அதோடு நம் தாய் மொழியை அடுத்த தலைமுறைக்கும் கடத்த வேண்டும்.

தாய் மொழியை கொண்டாடுவோம்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...