கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் பலி

வேகமாக பரவி வரும் பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை பாப்பநாயக்கன்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் உடல்நல குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு மேற்கொண்ட சிகிச்சையில் அவருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.

கடந்த சில தினங்களாக கோவையில் பல்வேறு பகுதியிலிருந்து பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் கோவை அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக தற்போது வரை பன்றிக் காய்ச்சலுக்கு 34 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 7 பேரும், மர்ம காய்ச்சலுக்கு 24 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கோவையில் கடந்த டிசம்பர் மாதம் முதல் தற்போது வரை 17 பேர் பன்றிக்காய்ச்சலால் பலியாகி உள்ளனர். இதில் கடந்த ஒரே வாரத்தில் மட்டும் பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் 5 பேர் பலியாகி உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமீப காலமாக கோவையில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். திடீரென காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவர்களை அனுக வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி உள்ளனர். 

கோவையில் அதிகளவு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் ஊழியர்கள் அலட்சியத்தால் ஒருவர் இறந்ததாக உயிரிழந்தவரின் உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...