தேர் திருவிழாவை முன்னிட்டு களை கட்டியது கோனியம்மன் கோவில்.



நாளை நடக்கவிருக்கும் கோவை புகழ் கோனியம்மன் தேர் திருவிழாவை முன்னிட்டு வண்ண விளக்குகளால் ராஜகோபுரம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 

 புதிதாய் கட்டப்பட்டுள்ள கோனியம்மன் திருக்கோயில் ராஜகோபுரமானது முழுவதும் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் காட்சி காண்போரை கவரும் வண்ணம் அமைந்துள்ளது. 



இன்று இரவு நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஆன்மீக சிறப்புரை மற்றும் விசேஷ பூஜைகளில் கலந்து கொள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவை மற்றும் சுற்றுப்புற இடங்களில் இருந்து வந்துள்ளனர்.  



 பச்சை பட்டு உடுத்தி, பாரம்பரிய நகைகள் மற்றும் வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அம்மனுக்கு மேல தாளத்துடன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. 



ஆயிரத்துக்கும் மேலான பக்தர்கள் கோனியம்மன் கோவிலில் உள்ள திருவிழா கோடி கம்பத்திற்கு மஞ்சள் கலந்த புனித நீரையுற்றி பக்தி பரவசத்தோடு அம்மனை வழிபட்டுவருகின்றனர். 



கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதல் காவல் படையினர் நூற்றிற்கும் மேற்பட்டோர் கோவில் மற்றும் தேர் திருவிழா நடக்கவிருக்கும் பகுதிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த விழாவை முன்னிட்டு நாளை போக்குவரத்து மாற்றங்கள் மதியத்திலிருந்து இரவு வரை அறிவிக்கப்பட்டுள்ளது.



Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...