கோவையில் டிஐஇ சார்பில் மகளிருக்கான தொழில்முனைவோர் ஏர்ஸ்வீ பயிற்சிப் பட்டறை


வாரங்காலில் நடைபெற்ற முதலாவது பயிற்சி பட்டறையின் வெற்றியைத் தொடர்ந்து, டிஐஇ குளோபல் கோவையில் நான்கு நாள் பயிற்சி பட்டறை நடந்தது. அகில இந்திய அளவில் தொழில் முனைவோரை உருவாக்கி, மகளிர் பொருளாதாரத்தை உயர்த்துதல் என்ற இந்த பயிற்சி பட்டறைக்கு தேவையான உதவிகளை இந்தியாவில் உள்ள அமெரிக்கா மிஷன் ஏற்பாடு செய்திருந்தது.

கோவை ரேஸ்கோர்ஸ்-யில் உள்ள தாஸ் சுர்யா விவாந்தாவில் நேற்று நடைபெற்ற பயிற்சிப் பட்டறையில் ஏர்ஸ்வீ திட்டத்தின் தலைவி சீமா சதுர்வேதி பங்கேற்று பேசுகையில், இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் உள்ள இளம் பெண்களின் முன்னேற்றம் தான் எங்களது நோக்கம். வாய்ப்புள்ள பெண்களுக்கு தொழில் வாய்ப்பு அளிப்பது பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுக்கும். 



ஏர்ஸ்வீ திட்டமானது அவர்களது நிலையை உயர்த்தி பிரச்சனைகளை சமாளித்து வாய்ப்புகளை பயன்படுத்தி, வெற்றிகரமான தொழில் முனைவோருக்கான தீர்வுகளை அளிப்பதாகும்" என்றார்.

இந்திய ஆலோசக ஹேமலதா அண்ணாமலை பேசுகையில், இந்த திட்டத்துக்கு நல்ல வரவேற்க கிடைத்ததையடுத்து 150 பேர் பல்வேறு போட்டிகளுக்கு இடையே தேர்வு செய்யப்பட்டனர்.



தேர்வு செய்யப்பட்டவர்கள் அனைவரும் பல்வேறு சமுதாய பொருளாதார பின்னணியை உடையவர்கள். இவர்களது தொழில் முனைவோர் வெற்றியை காண விரும்புகிறோம்" என்றார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகத்தின் கலாச்சார பிரிவு கவுன்சிலர் டாக்டர் க்ரேக் எல்.டிக்கர் இப்பயிற்சி பட்டறையில் பங்கேற்று பேசுகையில், தொழில் முனைப்பில் பெண்களின் பங்கு அவசியமானது. சிறந்த துவக்க நிலைக்கு தேவையானது, மிக முக்கியமானது.

இந்தியாவில் ஒரு நட்பு ரீதியான தொழில்முனைப்பு சூழலை உருவாக்க இந்த ஒரு வார கால பயிற்சி பட்டறை ஒரு முன் உதாரணமாக அமையும். டிஐஇ குளோபல் மற்றும் டிஐஇ கோவை இணைந்து கோவையில் இந்த பயிற்சி பணிமனையை நடத்துவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்" என்றார்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...