பன்னீர்செல்வம் முதலமைச்சராக பதவியேற்றதற்கு பின் உள்ள மர்மம் குறித்து விளக்கமளிக்க வேண்டும் என தம்பிதுரை பேட்டி

ஜெயலலிதாவின் உடல் அடக்கத்திற்கு முன்பாக ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக பதவியேற்றதற்கு பின் உள்ள மர்மம் குறித்து அவர் விளக்கமளிக்க வேண்டும் என நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியதாவது:-

நீட் தேர்வு மற்றும் நெடுவாசல் பிரச்சனைகள் மாநில அரசின் பிரச்சனைகள் எனவும் இதில் தாம் கருத்து கூற எதுவுமில்லை எனவும் கூறிய தம்பிதுரை, நீட் தேர்வினை ரத்து செய்வது குறித்து தமிழக அரசு மத்திய அரசிடம் பேசி வருகின்றது எனவும் மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து நட்புறவுடன் செயல்படுகிறது எனவும் அவர் அப்போது தெரிவித்தார்.

அண்ணா இறந்த போது அவரது உடல் அடக்கம் செய்த பின்னரே காபந்து முதலமைச்சராக நெடுஞ்செழியன் பொறுப்பேற்றார் எனவும், ஆனால் ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யும் முன்பாக பன்னீர்செல்வம் எதற்காக முதலமைச்சர் பதவி ஏற்றார் என அவர் விளக்கவேண்டும் எனவும் தம்பிதுரை தெரிவித்தார்.

அ.தி.மு.க.வில் அணிகள் எதுவும் இல்லை என கூறிய அவர், பொதுச் செயலாளராக சசிகலா நீடித்து வருவதாகவும் தெரிவித்தார். 

சசிகலாவிற்கு தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள நோட்டிஸிற்கு டிடிவி தினகரன் பதிலளித்துள்ளது சரியான நடைமுறை தான் எனவும், பொதுக்குழுவில் அனைவரும் கையெழுத்திட்டு சசிகலா பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் தற்போது அதனை எதிர்ப்பது ஏன்? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு ஏற்பட்டது இயற்கை மரணம் தான் எனக்கூறிய தம்பிதுரை இதில் மர்மம் எதுவும் இல்லை எனவும் தெரிவித்தார்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...