பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது என சிஐஐ தலைவர் நாராயணன் தகவல்

பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது என சிஐஐ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிஐஐ தலைவர் நாராயணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள ஜிடிபி குறித்த அறிக்கையின் படி இந்தியாவின் பொருதாராம், பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகும் சிறந்த வளர்ச்சி அடைந்துள்ளது. 

சமீபத்தில் வெளியிடப்பட்ட ஜிடிபி அறிக்கையின் படி 2017 ஆம் பொருளாதார ஆண்டில் பொருளாதாரம் சுமாரான வளர்ச்சியை அடைந்துள்ளது. நம்முடைய நாட்டின் வளர்ச்சியின் விகிதம் 7 சதவிகிதம் என்ற அளவிலேயே உள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் பாதிப்புகளை நாம் கடந்துகொண்டிருக்கிறோம். வரும் காலங்களில் இன்னும் அதிகமான வளர்ச்சி விகிதங்களை எட்டுவோம். பெரும்பாலான பெரு நிறுவனங்கள் தங்களுடைய பரிவர்த்தனைகளை பணம் இல்லாமல் செய்யக் கூடிய வகையில் மாற்றி அமைத்துக்கொண்டுள்ளனர். இது எதிர்வரும் காலங்களில் பொருளாதாரத்தில் மிகுந்த முன்னேற்றங்களை கொண்டு வரும். 

நுகர்வோர்கள் டிஜிட்டல் மற்றும் பணமில்லா பரிவர்த்தனை செய்வது எவ்வளவு எழிதானது என்பது குறித்து உணர்ந்துள்ளனர். பெரும்பாலானவர்கள் பணமில்லா பரிவர்த்தனைக்கு மாறிவிட்டனர். கிராமப்புரங்களிலும் மக்கள் இப்பரிவர்த்தனை முறைக்கு மாறிவிட்டனர். பல்வேறு துறைகளில் இருந்து வரும் தகவல்களின் படி விற்பனை குறைந்திருந்தாலும் தற்பொழுது அது மீண்டும் நல்ல நிலையை நோக்கி திரும்பியுள்ளது. இந்நடவடிக்கையில் குறைவாக பாதிக்கப்பட்ட மற்றொரு துறை விவசாயம். ராபி பருவகால அறுவடை குறித்து மிகுந்த கவலை நிலவியது. ஆனால் தற்போது வெளியிடப்பட்ட தகவலின் படி விவசாய உற்பத்தி சாதனை அளவுகளை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நம்முடைய கவனத்தை தற்போது பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் இருந்து தொழில் செய்வதில் எழிமை, மேக் இன் இந்தியா திட்டம் ஆகியவற்றின் மீது செலுத்த வேண்டும். அவை நம்முடைய வளர்ச்சியை அதிகரிக்கவும், நாட்டின் மீதுள்ள நமது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய உதவிகரமாக இருக்கும்.

இப்பொருளாதாரம் முன்னேற்றப்பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. வெளிப்புற சூழல்களில் இருந்து நமக்கு உதவி கிடைக்குமானால் 2018ஆம் ஆண்டில் நமது பொருளாதார வளர்ச்சி மிகச் சிறந்த உயரத்தை எட்டும் என நாராயணன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...