பல்லடம் அருகே குளிர்பான குடோனில் பணியாற்றிய 12 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!

பல்லடம் அருகேயுள்ள எம்.வி.எஸ் நகரில் இயங்கி வரும் குளிர்பான குடோனில் தொழிலாளர் நலத்துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில், அங்கு பணியாற்றி வந்த வட மாநில குழந்தை தொழிலாளர்கள் 12 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 6 பேர் தப்பியோடி உள்ளனர்.



திருப்பூர்: பல்லடம் அருகேயுள்ள எம்.வி.எஸ் நகரில் இயங்கி வரும் குளிர்பான குடோனில் பணியாற்றி வந்த வட மாநில குழந்தை தொழிலாளர்கள் 12 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 



திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே MVS நகரில் தனியார் குளிர்பான சேமிப்பு கிடங்கு இயங்கி வருகிறது. இங்கு 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 

இதில் பெரும்பாலானோர் பீகார், உத்திரபிரதேசம் போன்ற வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு பணியாற்றும் வட மாநில தொழிலாளர்களில் ஏராளமான குழந்தை தொழிலாளர்கள் உள்ளதாக தொழிலாளர் துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. 



இதன் அடிப்படையில் இன்று குளிர்பான சேமிப்பு கிடங்கில் திருப்பூர் தொழிலாளர் துறை மூன்றாம் சரக உதவி ஆய்வாளர் சுகந்தி மற்றும் குழந்தைகள் நலக்குழு பணியாளர்கள், காவல்துறையினர் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 



இதில் குளிர்பான சேமிப்பு கிடங்கில் பீகார் மற்றும் உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த 14 முதல் 18 வயதுடைய 12 குழந்தை தொழிலாளர்கள் இரண்டு மாதங்களாக 12,000 ரூபாய் சம்பளத்திற்கு பணியாற்றி வருவது விசாரணையில் கண்டறியப்பட்டது. அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வந்த நிலையில் ஆறு குழந்தை தொழிலாளர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர்.



இதை அடுத்து 12 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு திருப்பூரில் உள்ள குழந்தைகள் நல மையத்திற்கு வேன் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். குழந்தை தொழிலாளர்களை பணி அமர்த்தியதற்காக குளிர்பான சேமிப்பு கிடங்கு உரிமையாளர்கள் மீது குழந்தைகள் மற்றும் வளரினம் பருவ தொழிலாளர் முறைபடுத்துதல் மற்றும் தடுத்தல் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

திருப்பூர் குழந்தைகள் நல மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள 12 பேரையும் அவர்களது பெற்றோர்களை வரவழைத்து கவுன்சிலிங் அளிக்கப்பட்டு அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மேலும் தப்பி ஓடிய ஆறு குழந்தை தொழிலாளர்களையும் தேடி பிடித்து மீட்கப்படுவர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குளிர்பான சேமிப்பு கிடங்கில் 12 வடமாநில குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பல்லடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....