தமிழகத்தில் 18 மாவட்டங்களில் சதம் அடித்த வெயில்!

தமிழகத்தில் சென்னை, மதுரை, வேலூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவானது. அதன்படி, சென்னை நுங்கம்பாக்கம் - 105.98, சென்னை மீனம்பாக்கம் - 105.62, வேலூர் - 104.54, மதுரை நகரம் - 103.64, நாமக்கல் - 103.64, கடலூர் -103.28, தூத்துக்குடி - 103.1 டிகிரியும் பதிவானது.



சென்னை: தமிழகத்தில் சென்னை, மதுரை, வேலூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே கடுமையான வெயில் அடித்து வருகிறது. குறிப்பாக கத்திரி வெயில் என கூறப்படும் அக்னி நட்சத்திரம் காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் உச்சத்தை அடைந்து இருந்தது. 

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வெயில் தீப்பிழம்பை கக்கியது போல கொளுத்தி எடுத்தது. இதனால் மக்கள் மிகவும் அவதி அடைந்தனர். வீடுகளுக்குள் மின்விசிறி, ஏ.சி. போன்றவை இல்லாமல் இருக்க முடியாத சூழல் ஏற்பட்டது. வெயிலில் இருந்து தப்பிக்க மக்கள் நீர் ஆதாரங்களான ஜூஸ் வகைகள், மோர், தயிர், இளநீர், தர்பூசணி மற்றும் பழவகைளை வாங்கி சாப்பிட்டும் வந்தனர்.

கத்திரி வெயில் முடிந்தும், தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக பதிவாகி வருகிறது. சென்னை, மதுரை, வேலூர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கும் மேல் வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில், நேற்றும் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது. 

அதன்படி, சென்னை நுங்கம்பாக்கம் - 105.98, சென்னை மீனம்பாக்கம் - 105.62, திருத்தணி - 104.9, வேலூர் - 104.54, மதுரை நகரம் - 103.64, மதுரை விமான நிலையம் - 103.64, நாமக்கல் - 103.64, கடலூர் -103.28, தூத்துக்குடி - 103.1, சென்னை நுங்கம்பாக்கம் - 105.98, சென்னை மீனம்பாக்கம் - 105.62, வேலூர் - 104.54, மதுரை நகரம் - 103.64, நாமக்கல் - 103.64, கடலூர் -103.28, தூத்துக்குடி - 103.1, திருச்சி - 102.74, தஞ்சாவூர் - 102.2, பரமத்தி வேலூர் - 102.2, நாகை - 101.84, திருப்பத்தூர் - 101.84, பரங்கிபேட்டை-101.84, புதுச்சேரி-101.12, தருமபுரி-100.4, பாளையங்கோட்டை-100.76, சேலம்-102.22, காரைக்கால்-100.2 என பதிவாகி இருந்தது.

இதற்கிடையே வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலின் ஓரிரு இடங்களில் நேற்று முதல் செவ்வாய்க்கிழமை வரை 4 நாட்கள் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

இந்த நிலையில் கடந்த 8ஆம் தேதி மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய மிக தீவிர புயல் பிப்பர்ஜர் நேற்று வடக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்து, கோவாவில் இருந்து மேற்கே சுமார் 800 கி.மீ தொலைவிலும், மும்பையில் இருந்து மேற்கு-தென்மேற்கே சுமார் 820 கி.மீ தொலைவிலும், போர்பந்தரில் (குஜராத்) இருந்து தென் - தென்மேற்கே 830 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டிருந்தது. 

இது மேலும் வலுப்பெற்று அடுத்த 36 மணி நேரத்தில் வடக்கு-வடகிழக்கு திசையிலும் அதன்பிறகு அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு-வடமேற்கு திசையிலும் அடுத்த 3 நாட்களில் நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...