ஆனைகட்டி அருகே உயிரிழந்த யானைக்கு நுரையீரல் பிரச்சனை - உடற்கூறு ஆய்வில் தகவல்!

கோவை ஆனைகட்டி அடுத்த தூமனூர் வனப்பகுதியில் உயிரிழந்த பெண் யானைக்கு நுரையீரல் பிரச்சனை இருந்ததாக உடற்கூறு ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும் டி.என்.ஏ பரிசோதனைக்காக யானையின் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.


கோவை: கோவை மாவட்டம் ஆனைக்கட்டி அருகே தூமனூர் வனப்பகுதியில் உயிரிழந்த பெண் யானைக்கு நுரையீரல் பிரச்சனை இருந்ததாக உடற்கூறு ஆய்வில் தெரியவந்துள்ளது.

கோவை வனச்சரகம் ஆனைகட்டி அடுத்த தூமனூர் வனப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் நேற்று மாலை ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது காப்பு காட்டிற்கு வெளியே சுமார் 300 மீட்டர் தொலைவில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் வனத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இரவு நேரம் என்பதால் வன விலங்குகள் நடமாட்டம் இருக்கும் என்பதால், இன்று காலை சம்பவ இடத்திற்குச் சென்ற மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் மற்றும் கால்நடை மருத்துவர் குழுவினர் இறந்த பெண் யானைக்கு உடற்கூறு ஆய்வு மேற்கொண்டனர்.

அதில் உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்ட பெண் யானைக்கு நுரையீரல் பிரச்சனையால் உயிரிழந்தது உடற்கூறு ஆய்வில் தெரியவந்தது.

மேலும் இறந்த பெண் யானைக்கு சுமார் 26 முதல் 29 வயது இருக்கும் என்றும், இறைப்பை மற்றும் சிறு குடலில் உணவு ஏதும் இல்லாமல் இருந்துள்ளது.

இதன் மூலம் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட யானை சில நாட்களாக உணவு எடுத்துக் கொள்ளாமல் இருந்துள்ளது. மேலும் இதயமும் வீக்கமடைத்த நிலையில் உயிரிழந்துள்ளது.

கூடுதல் டி.என்.ஏ பரிசோதனைக்காக யானையின் குறுந்தந்தங்கள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என கால்நடை மருத்துவர்கள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...